உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்க வேண்டும் Be prepared to hold local elections - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்க வேண்டும் Be prepared to hold local elections

உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்க வேண்டும் Be prepared to hold local elections உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல் சென்னை உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார். 


 தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்ற வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து உள்ளாட்சிகளுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத் தலின் பேரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏற்ற வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து அண்மையில் வெளி யிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்து வது தொடர் பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் கடந்த மாதம் 31-ம் தேதி நடைபெற்றது. 


 அடிப்படை வசதிகள் இந்நிலையில், உள்ளாட் சித் தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்தப் பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் நேற்று நடைபெற்றது. 


இதில் மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனி சாமி கலந்துகொண்டு, மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி னார். இக் கூட்டத்தில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் மேற் கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனை விவரம், தேர்தல் நடத்தும் அலுவலர் கள், வாக்குச்சாவடி அலுவலர் கள் நியமனத்தின் நிலை, அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி, வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் அங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந் தார். ஆட்சியர்கள் விளக்கம் இவை தொடர்பாக அந்தந்த மாவட்டங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் விளக் கினர். பணிகளை முடிக்காத மாவட்டங்களில் விரைந்து பணி களை முடிக்குமாறு அறிவுறுத் தினார். அதைத் தொடர்ந்து, ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான அறிவிப்பு வந்தால், தேர்தலை நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியதாக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Be prepared to hold local elections
Instruction of the State Election Commissioner for District Collectors
Chennai
State Commissioner of Elections, P. Palanisamy has advised all district administrators to be ready for the local elections.

The 2016 local government elections in Tamil Nadu were canceled due to a court case. Subsequently, all the local authorities are assigned special officers and administrative work is underway.

In this context, the State Electoral Commission has recently released a draft voter list to suit the local elections. Following the local elections, a series of local elections was held on the 31st of last month with video footage of the Allo Sanctuary meeting with all the districts.

Basic amenities

The second phase of the preparatory workshop to hold the Lok Sabha elections was held yesterday at Rajaji Bhavan in Besant city, Chennai. State Commissioner of Elections, IR Palani Sami attended the meeting and held a district wise consultation.

At this meeting, the preliminary examination on the voting machines was asked about the basic amenities, including the position of the polling officers, polling officers, the training provided to them, the inspection of the polling booths, and the inclination of the incumbents.

Description of rulers

District Collectors have explained the status of their respective districts. He advised speedy completion of work in districts where work was not completed. Following this, when the local body polls are announced, all district rulers should be prepared to hold the polls, ”said state election commissioner Palanisamy.


No comments:

Post a Comment

Please Comment