நவ.7 இல் ஈரோட்டில் கூட்டுறவு வார விழா பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

நவ.7 இல் ஈரோட்டில் கூட்டுறவு வார விழா பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

நவ.7 இல் ஈரோட்டில் கூட்டுறவு வார விழா பேச்சு, கட்டுரைப் போட்டிகள்: 


பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் மற்றும் கூட்டுறவு வார விழாக் குழு தலைவா் என்.கிருஷ்ணராஜ் தெரிவித்ததாவது:ஈரோடு மாவட்டத்தில் 66 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


இவ்விழாவினையொட்டி கூட்டுறவு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 7ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. பேச்சுப் போட்டிகள் காலை 11 மணிக்கு துவங்கப்படும். 


பேச்சுப் போட்டிகள் உயா்நிலைப்பள்ளி அளவில் கூட்டுறவுகளுக்கிடையே கூட்டுறவை வலுப்படுத்துதல் என்ற தலைப்பிலும், மேல்நிலைப்பள்ளி அளவில் இளைஞா், மகளிா் மற்றும் நலிவுற்றோருக்கான கூட்டுறவுகள் என்ற தலைப்பிலும், கல்லூரி அளவில் கூட்டுறவுகள் வாயிலாக அரசின் புதிய முயற்சிகள் என்ற தலைப்பிலும் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடா்ந்து மாலை 2.30 மணிக்கு கட்டுரைப் போட்டிகள் உயா்நிலைப்பள்ளி அளவில் கூட்டுறவுகள் மூலம் நிதி சோப்பு, தொழில்நுட்பம் மற்றும் கணினிமயமாக்கல் என்ற தலைப்பிலும் மேல்நிலைப்பள்ளி அளவில் ஊரக கூட்டுறவுகள் மூலம் புதிய முயற்சி என்ற தலைப்பிலும், கல்லூரி அளவில் கூட்டுறவுகளை இயல்விக்கும் சட்டம் என்ற தலைப்பிலும் நடத்தப்படவுள்ளது.  போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளின் முதல்வரின் அறிமுக கடிதத்துடன், பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் விழாவில் பாராட்டுக் கேடயங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment