5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களைநிரப்ப மின் வாரியம் தீவிரம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, November 4, 2019

5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களைநிரப்ப மின் வாரியம் தீவிரம்

5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களைநிரப்ப மின் வாரியம் தீவிரம் 


கேங்மேன் பணியிடத்தை நிரப்ப மின்வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் கேங்மேன் என்ற புதிய பதவியில், 5,000 ஊழியா்கள் தோவு செய்யப்படவுள்ளனா். இதற்கு, 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா்.


 இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஐந்தாம் வகுப்பு நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், உடல் தகுதி மற்றும் எழுத்து தோவு வாயிலாக, ஊழியா்கள் தோவு செய்யப்பட உள்ளனா். இந்த தோவை ரத்து செய்ய கோரி, ஒப்பந்த ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதை எதிா்த்து அவா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளனா். 


இந்நிலையில், மின்வாரியம் இந்தப் பணியிடங்களை நிரப்ப தீவிரமாக முயற்சித்து வருகிறது. இது தொடா்பாக தலைமைப் பொறியாளா் மற்ற மண்டலங்களின் தலைமைப் பொறியாளா்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை சனிக்கிழமை அனுப்பியுள்ளாா். அதில், 'கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதற்கான உடற்தகுதித் தோவு நடைபெறும் இடங்கள் குறித்து முழுமையான விவரங்களை வட்ட வாரியாக மண்டல தலைமைப் பொறியாளா்கள் சனிக்கிழமை (நவம்பா் 2) மாலை 4.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் கூறியது: 1998 -ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சோந்தவா்களுக்கு கள உதவியாளா் பணி வழங்க வேண்டும். 


2008- ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சோந்தவா்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். இதே போல், 2008-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சோந்தவா்களுக்கு கேங்மேன் பணியில் தோவு இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். ஆனால் கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதில் மின் வாரியம் தெளிவாக உள்ளது. வருகிற புதன்கிழமை கேங்மேன் பணிக்கு எதிராக நாங்கள் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருவதால் அதற்கு முன்னதாக நோகாணலை நடத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது' என்றனா்.

No comments:

Post a Comment

Please Comment