முதலாம் பருவ புத்தகத்தில் இருந்து அரையாண்டு தேர்வு வினா: 5, 8ம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் அறிவுரை Teachers Advice to Prepare Students for Grades 5 and 8 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Saturday, November 9, 2019

முதலாம் பருவ புத்தகத்தில் இருந்து அரையாண்டு தேர்வு வினா: 5, 8ம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் அறிவுரை Teachers Advice to Prepare Students for Grades 5 and 8

முதலாம் பருவ புத்தகத்தில் இருந்து அரையாண்டு தேர்வு வினா: 5, 8ம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் அறிவுரை Teachers Advice to Prepare Students for STD 5 and 8நடப்பாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் பருவ புத்தகத்தை வைத்து மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அரையாண்டு தேர்வில், முதல் பருவ புத்தகத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.'மத்திய அரசின் வழிமுறைப்படி, தமிழகத்தில் நடப்பாண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

வரும் மூன்றாண்டுக்கு விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்பித்து, அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர் கொள்வது, தேர்வு உள்ளிட்டவைகளுக்கான வழிமுறைகளை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதே போல் மற்றொரு சுற்றறிக்கையை, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ளனர்.


அதில் கூறியுள்ளதாவது: நடப்பாண்டு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு மூன்று பருவத்துக்கான புத்தகம் வழங்கப்படுவதால், முதல் பருவ புத்தகத்தை மாணவர்கள், தற்போது பயன்படுத்தவில்லை. காலாண்டு தேர்வு முடிந்ததும், இரண்டாம் பருவ புத்தகத்தை படித்து, அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நடப்பாண்டு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வாக உள்ளதால், வரும் அரையாண்டு தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் பருவ புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். 


 எனவே, அதற்கேற்ப முதல் பருவ புத்தகத்தையும் எடுத்து வந்து, அவர்களை தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும். அரையாண்டு தேர்வுக்குப்பின், மூன்றாம் பருவம் தொடரும்போது, முதல் இரண்டு பருவ பாடப்புத்தகங்களையும், சீராக பயிற்சி வழங்கி, முழு ஆண்டு தேர்வில் முழு பாடத்தையும், மாணவர்கள் எழுதும் வகையில் தயார்படுத்த வேண்டும். 


இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல் பருவ புத்தகத்தை வழக்கமாக பயன்படுத்துவதில்லை என்பதால், பல மாணவ, மாணவியர் புத்தகங்களை தவற விட்டுள்ளதாலும், போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு வழங்கியதாலும், புத்தகம் இல்லாமல் பலர் இருப்பதை ஆசிரியர்கள் உணர்ந்துள்ளனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை யோசித்து வருகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -

Google Translation

Since the Public Exam has been announced for the first term, fifth and eighth standard from the current year, students should be prepared with the first term book. In the half-year exam, questions will be asked from the first season book. The next three years will be exempt. However, action will be taken to teach the students the necessary lessons and make all students pass, ”said Senkotaiyan, Minister of School Education. In this case, the school education department has issued instructions for students to face the general election of grades five and eight. Another circular has been sent to fifth and eighth grade teachers. Once the quarterly exam is over, they are reading the second season book and preparing for the half-year exam. As the general election for the current year, grade five and eighth grade, questions will be asked from the first and second season book in the coming semester.

Therefore, you should bring the first season book accordingly and prepare them for selection. After the semester is over, students should prepare the first two season textbooks, practice the course, and write the entire course in the full year exam as the third season begins. This is stated in the circular. Because the first season book is not routinely used, the authors realize that there are many students who have missed the book and given it to the students for competitive exams. They are thinking of alternative arrangements. - Our Special Reporter

No comments:

Post a Comment

Please Comment