3 புதிய மருத்துவ கல்லூரிகள் 3 New Medical Colleges - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

3 புதிய மருத்துவ கல்லூரிகள் 3 New Medical Colleges

நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூரில்  3 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 3 New Medical Colleges தமிழகத்தில் நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் அவர் கூறியதாவது: 

உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதைச் சந்திக்க தயாராக உள்ளோம். உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி 2021-ல் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றியைப் பெரும். முதல்வரின் முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத் துக்கு 6 மருத்துவக் கல்லூரி கள் கிடைத்துள்ளன. இது வரவேற் கத்தக்கது. மேலும் நாகபட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்குப் புதிய மருத்துவக் கல்லூரி கேட்டு விண் ணப்பித்துள்ளோம். 


விரைவில் அனுமதி கிடைத்துவிடும். விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் உயிரிழப்பைத் தடுக்க விபத்துக் காய சிகிச்சை நிலைப்படுத்தும் மையம் உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் தாமதம் தவிர்க்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்படும். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டும் பணி எந்தவிதத் தடையுமின்றி குறித்த காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment

Please Comment