கல்வி செய்திகள் சுருக்கமாக (9.11.2019) பாகம் - 2 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Saturday, November 9, 2019

கல்வி செய்திகள் சுருக்கமாக (9.11.2019) பாகம் - 2

இன்றைய செய்திகள்
9.11.2019(சனிக்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⚫⚫கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் சி.கூடலூர் ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளரும் மற்றும் ஜேக்டோ-ஜியோ முன்னாள் மாவட்டத் தொடர்பாளருமான திரு.குமரவேல் அவர்கள் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்த போது சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் நேரில் வந்து ஆறுதல் சொல்லி கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு கரூர் மாவட்ட ஆசிரியர்களின் மனதை விட்டு அகலவில்லை. போக்குவரத்து அமைச்சரும்.  அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து ஆறுதல் கூறினார்கள்.
🍒🍒அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு -நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
👉"இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும்" - வழக்கு பட்டியல் அட்டவணை வெளியீடு
👉அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது
👉தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
🍒🍒அயோத்தி தீர்ப்பு எதிரொலி :இன்று கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடுவதாக அறிவிப்பு.
🍒🍒அயோத்தி தீர்ப்பு எதிரொளி இன்று முதல் 13ஆம் தேதிவரை உத்தரபிரதேச மாநில பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை
🍒🍒தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கான உடற்கூறு சோதனை தேர்வு ரத்து
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
🍒🍒டெல்லியில் கடந்த 6 நாட்களாக நடந்துவந்த வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
இந்திய பார் கவுன்சில் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு இடையே நடந்த கூட்டத்தில் முடிவு.
🍒🍒5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது
👉பொதுத்தேர்வு குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை*_
- செங்கோட்டையன்


🍒🍒வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை (சார்ஜ் மெமோ) நோட்டீசுக்கு தடை
👉அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு


🍒🍒4 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்
🍒🍒 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
👉DSE - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - நவ.11- ல் தொடங்குகிறது.(உயர்நிலை,மேல்நிலைக்கு மட்டுமே)
🍒🍒பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை பின்பற்றாத 28 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஆய்வுகள்  தொடரும் என கிருஷ்ணகிரி CEO எச்சரிக்கை
🍒🍒பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த மகளிர் ஊழியருக்கு “Safe Surfing” ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துதல் - DSE Proceedings வெளியீடு 

🍒🍒2017-2018 & 2018-2019 ம் கல்வியாண்டில் +2 முடித்த பிறகு உயர்கல்வி பயில்வோருக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்படும். உயிர்கல்வி பயிலாதோர், பெயில் ஆனோருக்கு லேட்டாப் இல்லை. GO(Ms.) NO. 9 Dated: 01.11.2019

🍒🍒கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள்/அலுவலக பணியாளர்கள் விபரங்களை பணிபுரிந்த பள்ளியிலிருந்து மாறுதல் பெற்ற பள்ளிக்கு transfer செய்வதில் இருந்த பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. எனவே பள்ளி login மூலமாகவே மாறுதல் செய்து கொள்ளலாம்.

🍒🍒பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலங்களின் பங்களிப்பு முக்கியமானது என்று ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

🍒🍒தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது என்று சிஐஐ மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

🍒🍒உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை.

🍒🍒மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட ஆலோசனைக் குழு, கருப்புப்பணத்தை மீட்க புதிய 'அம்னெஸ்டி' என்ற திட்டத்தைக் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது.

🍒🍒வரும் 2020-21ஆம் கல்வி ஆண்டில் இருந்து 8-ஆம் வகுப்பிற்கு மூன்று பருவ பாடப் புத்தகங்களை ஒன்றிணைத்து ஒரே பாட நூலாக வழங்க அரசாணை வெளியீடு. அரசாணை எண் 187 நாள் 23.10.19

🍒🍒புதிய பென்ஷன் திட்டம்: வல்லுநர்குழு முடிவு என்னாச்சு??? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - நாளிதழ் செய்தி 
🍒🍒பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த மகளிர் ஊழியருக்கு “Safe Surfing” ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - கட்டணமாக ஆசிரியர்கள் ரூ.2200/- செலுத்த வேண்டும் 

🍒🍒ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் போட்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக ரத்து
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு:

🌹👉பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளை தளர்த்தக் கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.👉பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளை தளர்த்தக் கோரி ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளைத் தளர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது._
👉ஆனால், ஒருசில ஆசிரியர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வி அலுவலர்கள் மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், வழக்குத் தொடர்ந்த அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த மகளிர் ஊழியருக்கு Safe Surfing ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்துதல். அண்ணா மேலாண்மை நிறுவனத்திற்கு உரிய விவரங்கள் சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

👉2019 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா மேலாண்மை நிறுவனம் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைபண்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை 3 நாட்கள் பயிற்சி முகாமாக திட்டமிட்டு நடத்தியதாகவும், தற்போது அச்சு இயந்திரங்கள் காகிதமில்லா பரிவர்த்தனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாக மாற உள்ளதை தொடர்ந்து இதுவரை வலைதள நுணுக்கங்களை தன்னுடைய சொந்த (அ) அலுவலகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாத (அ) அறியாத ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பொருட்டு அதில் உள்ள குறைகளை தெரிந்து அறியும் பொருட்டு, இந்திய அரசின் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் உதவியுடன் இந்திய வலைதளம் மற்றும் கைபேசி சங்கம் (IAMAI) Safe Surfing என்னும் கருப்பொருளைக் கொண்டு வலைதளம் மற்றும் கைபேசிகளை பாதுகாப்புடன் பயன்படுத்துதல் சார்ந்த பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
👉மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பெண் ஆசிரியர்களுக்கு அத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கினால் அது  இரு வகையில் பயனளிக்கும் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். Safe surfing பயிற்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சியின் பயனாக அது மாணவர்களுக்கு வலைதளத்தினை பாதுகாப்பாகவும், நெறிப்படுத்தும் வகையிலும் பயன்படுத்த அறிவுறுத்துவதோடு அதன் நுணுக்கங்களை  ஆய்த்து தெரியவும் பயன்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
👉எனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர்களுக்கு ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் ஒரு குழுவில் இடம் பெறும் வகையில் இந்த safe Surfing எனப்படும் பயிற்சி திட்டத்தினை _நவம்பர் 20ல்_ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் ஒருவருக்கு ரூ.1000 (ஓராயிரம் மட்டும்) மும் பயிற்சி சாராக் கட்டணமாக ரூபாய் 1200/ -ம் மொந்தம் 2200/வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉இக்கட்டணம் பயிற்சிக்கான உபகரணங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் காபி, தேனீர், உணவு பிஸ்ட்டுகள், சிற்றுண்டிகள் ஆகியவற்றைப் வழங்குவதற்கான செலவினையும் உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉மேலும் பயிற்சி கட்டணம் ரூ 2200 (1000+1200) ஒவ்வொருவருக்கும் கட்டவேண்டியுள்ளதால் விருப்பம் உள்ள பெண் ஆசிரியைகள் மாவட்டத்திற்கு 6 பேர் வீதமும் (சென்னை, காஞ்சிரம், திருவள்ளூர், வேலுர், கூடுதலாக 2 பேர்) பயிற்சிக்கு அனுப்புவதற்கும் தேர்ந்தெடுத்து அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment