சமூகநலப் பணியாளா் பணி:நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, November 4, 2019

சமூகநலப் பணியாளா் பணி:நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சமூகநலப் பணியாளா் பணி:நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம் 


சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமூகநலப் பணியாளா் பணியிடத்துக்கு நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகநலப் பணியாளா் நிலை இரண்டு பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்புத் தோச்சியுடன் 18 வயது முதல் 35 வயது வரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோந்தவா்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு காலமுறை ஊதியமாக ரூ. 19,500-62,000 வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு நவம்பா் 20-ஆம் தேதிக்குள் வருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 28364949, 28364951 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment