வரலாற்றில் இன்று 16/11/19 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Saturday, November 16, 2019

வரலாற்றில் இன்று 16/11/19

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾*


        _*🌹சனிக்கிழமை 🌹*_

*✍பதிவு நாள்: 16-11-2019*

*கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.*

*🔵நிகழ்வுகள்*

🖌1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.

🖌1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரட்சர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.

🖌1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன.

🖌1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

🖌1797 – புருசியாவின் மன்னராக மூன்றாம் பிரெடெரிக் வில்லியம்சு முடி சூடினார்.

🖌1846 – இலங்கையில் கைம்பெண்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

🖌1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு, கடுந்தொழில் செய்யக் கட்டளையிடப்பட்டார்.

🖌1885 – கனடாவின் மேட்டிசுப் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.

🖌1904 – ஆங்கிலேயப் பொறியியலாளர் ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.

🖌1907 – ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.

🖌1920 – ஆத்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாசு ஆரம்பிக்கப்பட்டது.

🖌1933 – ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.

🖌1938 – எல்எசுடி முதல் தடவையாக ஆல்பர்ட் ஹாப்மன் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது.

🖌1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படை ஆம்பர்கு மீது குண்டுகளை வீசியது.

🖌1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் குயின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

🖌1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.

🖌1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

🖌1945 – பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.

🖌1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.

🖌1973 – மூன்று விண்ணோடிகளுடன் 84 நாள் பயணமாக ஸ்கைலேப் 4 விண்கலத்தை நாசா ஏவியது.

🖌1974 – ஆரசீபோ தகவல் புவேர்ட்டோ ரிக்கோவில் அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

🖌1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🖌1989 – மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எல் சல்வடோர் இராணுவத்தினர் இயேசு சபையைச் சேர்ந்த ஆறு மதகுருக்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர்.

🖌2002 – சார்சு நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

*🔵பிறப்புகள்* 

🖌1717 – ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1783)

🖌1922 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 2010)

🖌1930 – சின்னுவ அச்செபே, நைஜீரிய எழுத்தாளர் (இ. 2013)

🖌1938 – ரோபேர்ட் நோசிக், அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 2002)

🖌1962 – அம்பிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

🖌1971 – வக்கார் யூனிசு, பாக்கித்தானியத் துடுப்பாளர்

🖌1983 – தமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

🖌1985 – ஆதித்யா ராய் கபூர், இந்தித் திரைப்பட நடிகர்

*🔵இறப்புகள்*

🖌1240 – இப்னு அரபி, அராபிய மெய்யியலாளர் (பி. 1165)

🖌1801 – ஊமைத்துரை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி

🖌1903 – திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1869)

🖌1960 – கிளார்க் கேபிள், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1901)

🖌1977 – கனக செந்திநாதன், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1916)

🖌1985 – சித்பவானந்தர், இந்தியத் துறவி (பி. 1898)

🖌2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1912)

*🔵சிறப்பு தினம்*

🖌உலக சகிப்புத் தன்மை தினம்.

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .