தமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, November 6, 2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும். 


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாங்குநேரியில் ஓ.பன்னீர்செல்வம் தகவல் திருநெல்வேலி ``தமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும்” என்று, நாங்கு நேரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.நாராயணன் வெற்றிபெற்றார். 


வாக்காளர்களுக்கு நன்றி தெரி விக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத் தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம். ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டோம். அதற்கு மக்கள் ஆதரவு அளித்த னர். நாங்குநேரி தொகுதியில் பெற்ற வெற்றி அதிமுக என்ற இயக்கத்தை அசைக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது. 


 இன்னும் 15 தினங்களில் உள் ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரவுள் ளது. டிசம்பரில் நடைபெறும் உள் ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெறு வோம். இனி எந்த தேர்தல் வந்தா லும் அதிமுக வெற்றிபெறும். நாங்கு நேரி தொகுதி சொர்க்க பூமியாக மாறும் என்றார் அவர். மின்துறை அமைச்சர் பி.தங்க மணி தலைமை வகித்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் வி.எம்.ராஜலெட்சுமி, திண்டுக்கல் சீனி வாசன், செல்லூர் ராஜு, வி.சரோஜா, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்ல மண்டி என்.நடராஜன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜி.பாஸ்கரன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Please Comment