உள்மாவட்டத்துக்குள் கல்வி சுற்றுலா: பள்ளி மாணவர்கள் 1,400 பேர் தேர்வு - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, November 4, 2019

உள்மாவட்டத்துக்குள் கல்வி சுற்றுலா: பள்ளி மாணவர்கள் 1,400 பேர் தேர்வு

உள்மாவட்டத்துக்குள் கல்வி சுற்றுலா: பள்ளி மாணவர்கள் 1,400 பேர் தேர்வு 


உள் மாவட்டத்துக்குள் உள்ள தொன்மையான பகுதிகள், கோவில், ஆறு, அணைக்கட்டு உள்பட பல்வேறு இடங்களுக்கு, கல்வி சுற்றுலா செய்ய, 56 அரசு பள்ளிகளை சேர்ந்த, 1,400 மாணவ, மாணவியர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய, மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், ராஷ்டிரிய அவிஷ்கார் அபியான் திட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம், உள் மாவட்டத்துக்குள் உள்ள தொன்மையான இடம், பிரசித்த பெற்ற கோவில், அருட்காட்சியம், ஆறு, அணைக்கட்டுகள், பூங்காக்கள், பெரிய கல்வி நிறுவனங்கள் உள்பட சுற்றுலா தளங்களுக்கு, ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரை, ஒருநாள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர். 


அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், ஒரு நாள் கல்வி சுற்றுலா செல்ல, 56 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒரு பள்ளிக்கு, 25 மாணவர்கள் வீதம், மொத்தம், 1,400 மாணவ, மாணவியர், சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது. இம்மாதம் இரண்டாவது வாரம் முதல், மாத இறுதிக்குள், மாணவர்களை பாதுகாப்புடன் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுவர, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment