1,000 பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, November 1, 2019

1,000 பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

1,000 பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் 


மாணவர்களை ஊக்கப்படுத்தவும், சிறந்த மாணவர்களாக உருவாக்க வும் தமிழகத்தில் 1,000 பள்ளிக ளில் தலா ரூ.20 லட்சத்தில் ‘அடல் டிங்கர்' ஆய்வகம் அமைக்கப் படும் என அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். கரூர் வெண்ணெய்மலை தனி யார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நேற்று நடைபெற்ற, 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுச்சூழல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணிதக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.  பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவர்களாக உருவாக்குவதற் கும் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் ‘அடல் டிங்கர்' ஆய்வகம் வரும் ஜனவரிக்குள் அமைக்கப்படும் என்றார். பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வும், ஆராய்ச்சித் திறனை மேம்ப டுத்தவும் அமைக்கப்படும் ‘அடல் டிங்கர்' ஆய்வகம், ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் உருவாக்கப் பட உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment