கல்வி செய்திகள் 08/11/19 - துளிர்கல்வி

Latest


♨Dear New Admins Please add this number 9629345493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Friday, November 8, 2019

கல்வி செய்திகள் 08/11/19

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

இன்றைய செய்திகள் 
8.11.19(வெள்ளிக்கிழமை)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔴⚫10,11,12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
👉10ஆம் வகுப்புக்கு டிச.13ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு 23ஆம் தேதியுடன் முடிகிறது
👉11, 12ஆம் வகுப்புகளுக்கு டிச.11இல் தொடங்கும் அரையாண்டு தேர்வு 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது -பள்ளிக்கல்வித்துறை
🔴⚫டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் கடந்த 5 நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
🔴⚫மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
🔴⚫பன்னாட்டளவில் பிரசித்தி பெற்ற எஃகு உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டல், இத்தாலி நாட்டில் உள்ள தனது ஆலையிலிருந்து 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது.
🔴⚫கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
🔴⚫அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் மத்திய பாதுகாப்புப் படையினர் 4000 பேர் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எட்டு இடங்களில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
👉 சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி அறிவுறுத்தல்
🔴⚫குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய வரும் 9ம் தேதி முகாம் - தமிழக அரசு
🔴⚫ JEE- தேர்வுகளை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கை வைக்கவில்லை: NTA
🔴⚫அரசுப் பள்ளிகளில் காலையும் சத்துணவு
👉அரசுப் பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவை காலையும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 24,301 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இதற்கு ஆண்டுதோறும் ரூ.400 கோடி வரை செலவாகும் எனவும் இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
🔴⚫அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் 
🔴⚫DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு
🔴⚫நாளை 9/11/19(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள்
🔴⚫ஆசிரியர்களின் ஊதியதோடு அரசு மருத்துவர்களின் ஊதியத்தை ஒப்பிடவில்லை: நீதிபதிகள் கருத்து
🔴⚫NEET: மாணவர்களின் கைரேகையை சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க உத்தரவு
🔴⚫காவலர் உடற்தகுதி தேர்வு: முதல் நாளில் 530 பேர் தேர்வு
🔴⚫ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு செய்ததாக 300 ஆசிரியர்களை பதவி நீக்கம் செய்ய மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 
🔴⚫புதுடெல்லியில், ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு 2020 ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
🔴⚫PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு : 8.11.2019 , 9.11.2019 ஆகிய தேதிகளில் 11 மாவட்டத்தில் சரிபார்ப்பு இடம் குறித்து  பட்டியல் வெளியீடு.  
🔴⚫கர்நாடக மாநிலத்தில் டிவி' நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை வைத்து, தான் படிக்கும் அரசு பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க, அப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவன் முடிவு செய்துள்ளார் 
🔴⚫கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 10-க்குள் கருத்துக்கள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
🔴⚫🔴⚫🔴⚫🔴⚫
🌹🌹DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு

🌹👉நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதனால் மாணவர்களின் புத்தகச்சுமை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉இதனைத் தொடர்ந்து சென்ற கல்வியாண்டைப்போலவே இக்கல்வியாண்டிலும் நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக Soft Copy ( CD)  மூலம் கணினி வழியாக பாடத்தை நடத்திடவும் இதற்கான CD- யை National Stock Exchange நிறுவனம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
🔴⚫🔴⚫🔴⚫🔴⚫
🌹🌹பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 18,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்:

🌹👉பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
👉சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இழப்பை சந்தித்து வரும் நிலையில் விருப்ப ஓய்வு பெற விருப்பம் உள்ளவர்களுக்காக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
👉அதன்படி 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். பணியில் இருந்த வருடங்களைக் கணக்கிட்டு  ஆண்டுக்கு 35 நாட்களுக்கான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் , ஓய்வு பெறும் வயதுவரை  25 நாட்களுக்கான சம்பளம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
👉கடந்த 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் விருப்ப ஓய்வு பெற  டிசம்பர் 4 ஆம் தேதி வரை ஒருமாதம் காலம் வாய்ப்பளிக்கப்படும். இதன் கீழ் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .