கல்வி செய்திகள் (06/11/19) - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, November 6, 2019

கல்வி செய்திகள் (06/11/19)

இன்றைய செய்திகள்
6.11.2019(புதன்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑வாக்காளர்  பட்டியலில் உங்களது பாகம்  எண்  ,வரிசை எண்ணை அறிய
👉1950 
என்ற   இலவச சேவை  எண்ணிற்கு  போன் செய்து    எண்  1ஐ அழுத்தினால்  தமிழில்  வரும்.
👉தொடர்ந்து எண் 4ஐ அழுத்தினால்  சேவை அதிகாரி  உங்களுக்கு
தொடர்பில் வருவார். 
👉உங்கள்  வாக்காளர்  அடையாள அட்டை  எண்ணைக்கூறி   
பாகம்  எண்  ,வரிசை எண்ணை
எளிதாக  அறிந்து  கொள்ளலாம்.
⛑⛑தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு  
⛑⛑ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் பயன்பாட்டினை வலியுறுத்தல் - தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
⛑⛑திருச்சியில் எலைட் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய பரமபத விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் நலன் காக்கும் பயிற்சி  பள்ளியில் நடைபெற்று வருகின்றது
⛑⛑"பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - எனவே இப்போட்டி தேர்வில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
⛑⛑ஜல்சக்தி அபியான் திட்டம்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு. 
பள்ளியிலும், வீட்டி லுமாக வீணாகும் நீரை கட்டுப்படுத்தி, தினமும், 1 லிட்டராவது சேமிக்க வேண்டும். தண்ணீர் குறித்த ஆய்வுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும்.
⛑⛑ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ‘பவர் பிளேயர்’ முறையை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு*
⛑⛑அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் சென்னை மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீதகட்டணத் தள்ளுபடி
⛑⛑அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள் மூடப்படும்
பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு
⛑⛑மருத்துவ படிப்பு சேர்க்கையில் அடுத்த முறைகேடு அம்பலம்:
5 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 5 மாணவர்கள் முறைகேடாக சேர்ந்தது கண்டுபிடிப்பு
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தீவிர விசாரணை
⛑⛑5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்*_
தேர்வு தேதிகள் மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
⛑⛑ வருகிற 10ந் தேதியில் இருந்து மறுஉத்தரவு வரும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
⛑⛑மரங்கள்  வெட்டப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்கள் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
⛑⛑தொடர் அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக மூடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.
⛑⛑உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு டிசம்பரில் வெளியாக வாய்ப்பு: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தகவல்
⛑⛑பத்து நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்தால் 360 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் கார் பேட்டரி அறிமுகமாகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் பேட்டரி கண்டுபிடிப்பை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
⛑⛑ஐபிஎல் போட்டித் தொடரில் பவா் பிளேயா் என்ற பதிலி வீரா்கள் களமிறக்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
⛑⛑கிராம சுகாதார செவிலியா் பணி:13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
⛑⛑பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு:-
👉நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை  முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு  குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறும் நல்லுறவு கொள்ளுமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
⛑⛑மார்ச் 2020 பொதுத்தேர்வு - ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான தலைமையாசிரியர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
⛑⛑புதுதில்லியில் (04.09.2019) அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும்  விழாவில், DIKSHA செயலியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால், அதனை பாராட்டும் விதத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் திரு.ஆர். சுடலைக்கண்ணன். ,இ.ஆ.ப., அவர்கள் நேற்று (05.11.2019) தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி_ அவர்களிடம்  காண்பித்து வாழ்த்து பெற்றார்.
உடன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன்_ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.
⛑⛑அந்தமானில்                                              இன்று உருவாகிறது புதிய புயல் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
⛑⛑இந்தியாவில் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரித்து அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது, நாடு முழுக்க எட்டு மணி நேரமே வேலை நேரமாக இருந்து வருகிறது.
⛑⛑அரசு ஊழியர்களின் சம்பளப் பட்டியல்களை தேவையில்லாமல் திருப்பி அனுப்பக் கூடாது: கருவூலத் துறை செயலருக்கு
நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார்.
⛑⛑School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் 
உருவாக்கப்பட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment