வரலாற்றில் இன்று 05/10/19 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Tuesday, November 5, 2019

வரலாற்றில் இன்று 05/10/19

*🔵நாடும் ⚖ நடப்பும்*

*🇵🇾 வரலாற்றில் இன்று 🇵🇾*


             _*🌹செவ்வாய் 🌹*_

*✍பதிவு நாள்: 05.11.2019*

*🔵நிகழ்வுகள்*

🖌1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.

🖌1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.

🖌1605 – ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

🖌1757 – புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.

🖌1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.

🖌1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.

🖌1861 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.

🖌1862 – மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

🖌1895 – தானுந்தின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.

🖌1911 – செப்டம்பர் 29 இல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.

🖌1913 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

🖌1917 – அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.

🖌1935 – மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

🖌1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🖌1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.

🖌1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

🖌1967 – லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1971 – இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.

🖌1987 – தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

🖌1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.

🖌1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

🖌2006 – 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.

*🔵பிறப்புகள்*

🖌1854 – பவுல் செபாடியர், பிரெஞ்சு வேதியியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவர். (d. 1941)

🖌1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)

🖌1920 – டக்லஸ் நார்த், அமெரிக்க பொருளியலாளர், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வென்றவர்.

🖌1948 – பாப் பார்,அமெரிக்க அரசியல்வாதி

🖌1948 – வில்லியம் டானியல் பிலிப்ஸ், அமெரிக்க இயற்பியலாளர், இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்.

🖌1952 – வந்தனா சிவா, இந்திய இயற்பியலாளர்.

🖌1955 – கரண் தபார், இந்திய நிருபர்.

🖌1959 – பிரையன் ஆடம்ஸ், கனடிய பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.

🖌1987 – கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். (ஜோனாஸ் சகோதரர்கள்)

🖌1988 – விராட் கோலி, இந்திய துடுப்பாட்டக்காரர்.

*🔵இறப்புகள்*

🖌1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)

🖌1879 – ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (பி. 1831)

🖌1930 – கிறிச்டியன் ஈஜ்மன், டச்சு இயற்பியலாளர், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (b. 1858)

🖌1944 – அலெக்சிஸ் காரெல், பிரெஞ்சு மருத்துவர், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (b. 1873)

🖌1975 – எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909)

🖌2011 – பூபேன் அசாரிகா, இந்திய பாடகர், இயக்குனர் மற்றும் கவிஞர் (b. 1926)

➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment