வடமாநில 'நீட்' பயிற்சி மையங்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு! ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பு: கோடிகளில் வருமானம் கொட்டுவதால் தாராளம் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, October 29, 2019

வடமாநில 'நீட்' பயிற்சி மையங்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு! ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பு: கோடிகளில் வருமானம் கொட்டுவதால் தாராளம்

வடமாநில 'நீட்' பயிற்சி மையங்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு! ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பு: கோடிகளில் வருமானம் கொட்டுவதால் தாராளம்
'நீட்' போட்டி தேர்வுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனங்களில், கோடிகளில் பணம் புரள்வதால், நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. இதனால், வடமாநில மையங்கள், தமிழகத்துக்கு படையெடுக்கின்றன.தமிழகத்தில், மருத்துவ படிப்புகளான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்டவைக்கான மாணவர் சேர்க்கை, இரு ஆண்டாக, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதனால், மருத்துவ படிப்பை விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
அதற்கேற்ப, பல்வேறு நிறுவனங்கள், பள்ளிகளுடன் இணைந்து, முழு நேர பயிற்சி வழங்குவதில் இறங்கியுள்ளன. இவற்றில், ஆண்டுக்கு, ஒரு லட்சம் முதல், நான்கு லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், இப்பயிற்சியில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், வடமாநிலங்கள், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயிற்சி மையங்கள், தமிழகத்தை நோக்கி படையெடுக்கின்றன.இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 
தமிழகத்தில், இரு ஆண்டுக்கு முன் வரை, குறைந்தபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர் கூட, மருத்துவ படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர முடியும். இதனால், பல லட்சம் ரூபாய் வரை கல்லூரிக்கு நன்கொடை கொடுத்து, பலரும், தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். தற்போது, நிர்வாக ஒதுக்கீட்டில் சேரக்கூட, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், அதற்கான வழிகளை தேட ஆரம்பித்துள்ளனர். 
ஏற்கனவே, நீட் தேர்வு பயிற்சியில் அனுபவமுள்ள பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, பல பள்ளிகள் போட்டித்தேர்வு பயிற்சிகளை நடத்துகின்றன. இங்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு கூட, லட்சங்களில், மாத சம்பளம் வழங்கப்படுகிறது. கோடிகளில் லாபம் வருவதால், செலவுகள் பொருட்டாக தெரிவதில்லை. போட்டித்தேர்வு மையங்களை குறிவைத்து, வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துவதிலிருந்தே, இதன் வீரியத்தை உணர முடியும். 
 லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஆசிரியர்கள், இணையதள பயிற்சி, தேசிய அளவில் பாடத்திட்ட கட்டகங்கள் என, இவர்களின் கற்பித்தலுடன், போட்டி போட சாதாரண பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிட முடியாது. இதனால், மருத்துவ படிப்பு, எதிர்காலத்தில் வசதியுள்ளவர்களுக்கான படிப்பாக மாறுவது உறுதி. 
பயிற்சி மையங்களில் சேராமல், பிளஸ் 2 மட்டும் படித்து, மருத்துவ படிப்பில் சேர்வது என்பது நடக்காத காரியமாக மாறிவிடும். இச்சூழலில், போட்டி மையங்கள், தமிழகத்தில் உள்ள வாய்ப்புகளை புரிந்துகொண்டு, வட மாநிலங்களிலிருந்து, இங்கு படையெடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment