கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கத் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை - துளிர்கல்வி

Latest


♨Dear New Admins Please add this number 9629345493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Wednesday, October 30, 2019

கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கத் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கத் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை
அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 பேருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்லாதோர் எண்ணிக்கை கண்டறியப்பட்டிருந்தாலும், கல்லாதோர் எனக் கண்டறிய தேர்வொன்றை நடத்த வேண்டும் என பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை சிறப்பு மையங்களில் சேர்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்லாதோருக்கான சிறப்பு மையங்கள் தனி நிதி உதவியுடன் செயல்படும். 2019லிருந்து 2021ஆம் ஆண்டுவரை இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். 
ஒரு பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்ட 40 பேர் வீதம், 4 கட்டங்களாக வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6 மாதப் படிப்பிற்கு பின்னர் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேட் முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .