நகங்கள் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி

கல்விச்செய்திகள் உடனுக்குடன்...


நட்பில் இணைந்திருங்கள்




















Monday, October 7, 2019

நகங்கள்


*நகங்கள் - நோய்களைக் வெளிக்காட்டும்*


*கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே?  நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும்.* *இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.*


*வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது.* *இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.*


*நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும்* *வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் ‘மொனிட்டர்’ போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.*

*அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு,  நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..*

*ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.*

*நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..*

*நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:*

*நகங்கள் மிருதுவானவை. விரல்களின்* *சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது.* *பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.*

*பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.*

*ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..*

*சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.*

*மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.*

*இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.*

*நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.*

*இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.*

*சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.*

*நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.  நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.*

*நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..*

*இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.*

*மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்*
*மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி*
*நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை*


*நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.*

*இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.*

*நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.*
*சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.*

*நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்*

*சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்*

*சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்*

*பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்*

*ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்*

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .