கல்வி செய்திகள் 29/10/2019 - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Tuesday, October 29, 2019

கல்வி செய்திகள் 29/10/2019

இன்றைய செய்திகள்
29.10.19(செவ்வாய்க்கிழமை)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⚫⚫குழந்தை சுஜித்தை  காப்பாற்ற எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது துர்நாற்றம் வீசியதால் குழந்தை சுஜித் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

⚫⚫சுஜித் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்பு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது


அமைச்சர்கள் அரசு சார்பாக மரியாதை செலுத்திய பின்பு உடல் பாத்திமா நகரில் உள்ள இடுகாட்டில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறவுள்ளது.

⚫⚫குழந்தை சுஜித்தை எப்படியாவது மீட்டு விடலாம் என நம்பிக்கையில் கடைசி வரை அங்கேயே இருந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்ல மண்டி நடராஜன்,வளர்மதி கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் IAS இராதாகிருஷ்ணன் மற்றும் மீட்பு குழுவினர் அனைவரது முயற்சியும் பாராட்ட தக்கது.

⚫⚫சுஜித்தின் ஆத்மா சாந்தி அடையவும் மகனை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

⛑⛑எமிஸ் இணையதள பதிவேற்றம்: பள்ளிகளில் அலுவலகப் பணியாளரை நியமிக்க வலியுறுத்தல்

⛑⛑தேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவி
⛑⛑ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் - ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட  கலெக்டர் சத்திய நாராயணன் அறிவிப்பு

⛑⛑80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வரும் தேர்தலில் தபால் ஓட்டு போடலாம் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு

⛑⛑TRB சிறப்பாசிரியர் நியமனம் ஓவியம் தமிழ்வழி ஒதுக்கீடு நிறுத்திவைப்பு - ஆசிரியர் சங்கம் புகார்

⛑⛑கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணம்: நவ.30 வரை காலக்கெடு நீடிப்பு

⛑⛑அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
⛑⛑அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மழைநீ்ர் தேங்காத வகையில் சுத்தகமாக பராமரிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

⛑⛑பாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால்,தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

⛑⛑உயா் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி புகாா் பிரிவு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது 
⛑⛑தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை (நவ. 1) இம்மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

⛑⛑மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து 1234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது                         ⛑⛑சேலம் மாவட்டத்தில் கொளத்தூர் ஒன்றியத்தில் பாலமலை பகுதியிலுள்ள  ஆரம்ப மற்றும் நடுநிவைப் பள்ளிகளுக்கு மலைப்படி மற்றும் குளிர்க்காலப்படி அனுமதித்து முதன்மைக் கல்வி அலுவலரின்  செயல்முறைகள்  வெளியீடு
⛑⛑5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வருவதால் புதிய அறிவிப்பு வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ கல்வி முறை திட்டமானது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது - நாளிதழ் செய்தி

⛑⛑4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதால், அரசு ஊழியர்கள் தங்கள் விரும்பும் புதிய/பழைய மாவட்டத்தில் பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் 5.11.2019 மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும்- வருவாய் துறையின்  சுற்றறிக்கை வெளியீடு

⛑⛑6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்திற்கு 7 பாடவேளைகள் ஒதுக்கப்படுமா ? என்ற  கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் பள்ளியில்  மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப தலைமையாசிரியர் முடிவு செய்துக்கொள்ளலாம் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

⛑⛑மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தல் மற்றும் பாடவேளை ஒதுக்கீடு செய்து சரிபார்த்தல் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹ஆழ்துளை கிணறுகளை மூட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்

🌹👉நாட்டில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
👉இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது குழந்தை விழுந்தது மிகவும் வருந்தத்தக்கது என அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
👉குழந்தைகளின் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பினரும் அதிக முக்கியத்துவம் அளித்து, பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்


சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்