சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஈடுஇணையற்ற இயற்கை மருந்து..! Natural medicine for people with diabetes .. - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, October 3, 2019

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஈடுஇணையற்ற இயற்கை மருந்து..! Natural medicine for people with diabetes ..

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஈடுஇணையற்ற இயற்கை மருந்து..! Natural medicine for people with diabetes ..சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலர் பயந்து நடுங்குகின்றனர். கடைசிவரை, மாத்திரை இன்சுலின் இல்லாமல் வாழமுடியாது என்று அவர்கள் பயமுறுத்திவைக்கப்பட்டுள்ளனர். 


 சர்க்கரை நோய்க்கு ஈடுஇணையற்ற இயற்கை மருந்து உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தினால் சர்க்கரை நோய் வராது, வந்துவிட்டாலும்கூட எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த இயற்கை மருந்து உங்களிடமே இருக்கிறது. ஆம், வாயில் ஊறக்கூடிய உமிழ்நீர்தான் இந்த இயற்கை மருந்து. ஆம், உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் ஈடு இணையற்ற இயற்கை மருந்து. உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக உண்டனர். உண்பதற்காக வாழ்ந்தனர். 
அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர். அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. இப்போது, நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது. Natural medicine for people with diabetes ..


வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது. 


உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும். நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது. சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான். எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்று முன்னோர்கள் சொன்ன விதியை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். சாப்பிடும்போது, ஒவ்வொரு வாய் உணவையும் குறைந்தது 32 முறை பற்களால் அரைத்து, உமிழ்நீருடன் கலந்து கூழாக்கி சாப்பிடுங்கள். நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும். நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு எளிதாக வென்று விடலாம். மறந்து விடாதீர்கள் : உமிழ்நீர் உயிர்நீர்..!

No comments:

Post a Comment

Please Comment