கல்விச்செய்திகள் 31/10/2019 (I) - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, October 31, 2019

கல்விச்செய்திகள் 31/10/2019 (I)

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஐப்பசி 14 ♝ &   31•10•2019*

🔥
🛡சார்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று  தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடுதல் சார்ந்தும், உறுதிமொழி ஏற்கவும் மாநில திட்ட இயக்குநர்  உத்தரவு

🔥
🛡2019-2020 கல்வியாண்டு இறுதியில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த குழு மற்றும்  கேள்வித்தாள் அமைத்தல், விடைத்தாள் திருத்தும் பணி,  தேர்வு நடைபெறும் முறை அனைத்திற்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கி  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🔥
🛡திருச்சி மாவட்ட குமுளூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆரம்ப/நடுநிலைப் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி 
ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்குதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡விருதுநகர்,  ராமநாதபுரம் மாவட்டங்களில் 1,68,716 கல்லாதோருக்கு எழுத்தறிவு வழங்க சிறப்பு திட்டம். 2 மாவட்டங்களிலும் சிறப்பு மையம் அமைத்து 2 ஆண்டுகளுக்கு வகுப்புகள் நடத்த 6.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வெளியீடு.

🔥
🛡மக்கள்தொகைக் கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி (Role Play) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  நடத்துதல் - தொடர்பாக SCERT செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡STFI கூட்டங்களில் பங்கேற்க TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் ஜெய்ப்பூர் பயணம்

🔥
🛡உதகை, குந்தா, கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக இன்று  விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

🔥
🛡கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலையிலுள்ள பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிப்பு

🔥
🛡கனமழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை 
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

Please Comment