வேலூர் மாவட்ட அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஆழ்துளை கிணறு விவரம் இன்று 3.00 மணிக்குள் Online - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Direct Uploading Link - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Wednesday, October 30, 2019

வேலூர் மாவட்ட அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஆழ்துளை கிணறு விவரம் இன்று 3.00 மணிக்குள் Online - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Direct Uploading Link

வேலூர் மாவட்ட அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஆழ்துளை கிணறு விவரம் இன்று 3.00 மணிக்குள் Online - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Direct Uploading Link 


அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு சார்பான விவரத்தை இணைப்பிணை Click செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ / நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் வட்டாரக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்த பின் அனைத்து படிவங்களை பெற்று தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


 அனைத்துவகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் விரங்களை ஆன் லைனில் உள்ளீடு செய்துவிட்டு , படிவத்தை பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ / நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் மூடப்படாத நிலையில் ஆழ்துளை கிணறு இருப்பின் விவரத்தை சார்ந்த BDO அலுவலகத்திற்கு விவரத்தை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


 உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூடப்பாடத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு இருப்பின் விவரத்தை உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWN LOAD THE FORM
No comments:

Post a Comment

Please Comment