குரூப்-2 மெயின் தேர்வில் வென்றவர்களுக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமியில் இலவச மாதிரி நேர்காணல் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, October 30, 2019

குரூப்-2 மெயின் தேர்வில் வென்றவர்களுக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமியில் இலவச மாதிரி நேர்காணல்

குரூப்-2 மெயின் தேர்வில் வென்றவர்களுக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமியில் இலவச மாதிரி நேர்காணல் நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு அரசுத் துறையில் காலி யாக உள்ள நகராட்சி ஆணையர், உதவி வணிகவரி ஆணையர், சார் பதிவாளர், உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் போன்ற 1,335 பணி களை உள்ளடக்கிய குரூப்-2 மெயின் தேர்வு முடிவு வெளியிடப் பட்டுள்ளது. இதில் ஈரோடு சத்யா ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 162 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 


இவர் களுக்கு நவ.6-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இவர்கள் நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள உதவும் வகையில் ஆளுமை மேம்பாடு வகுப்புகள், நடப்பு நிகழ்வு வகுப்புகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இலவச மாதிரி நேர் காணல்கள ஆகியவற்றை சத்யா ஐஏஎஸ் அகாடமி சென்னை மற் றும் ஈரோட்டில் நடத்த உள்ளது. 


 ஐஏஎஸ் அதிகாரிகள், குரூப்-1, குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது அதிகாரிகளாக பணியில் உள்ளவர்கள் மேற் கண்ட வகுப்புகள் மற்றும் இலவச மாதிரி நேர்காணல்களை நடத்த வுள்ளனர். சென்னையில் நவ.1-ம் தேதியும், ஈரோட்டில் நவ.2-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கு கின்றன. இதில் பங்கேற்க விரும்புவோர் 044-26222360, 0424-2226909 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment