World Peace Day சர்வதேசஅமைதிதினம்.. - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Saturday, September 21, 2019

World Peace Day சர்வதேசஅமைதிதினம்..

#இன்று செப்டம்பர் 21,#சர்வதேசஅமைதிதினம்..
World Peace Day 

சர்வதேச அமைதி தினம் ஆயுதமில்லா உலகைப் படைக்க வாருங்கள்!

சர்வதேச அமைதி தினத்தின் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

முதல் இரண்டு உலகப் போர்களால் பேரழிவை சந்தித்திருந்த நாடுகள், அதிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டன. ஏராளமான உயிர்கள் பலியாகின. ஈடு செய்ய முடியாத பொருட்சேதம் ஏற்பட்டன. இதுபோன்ற நிலை மீண்டும் வராமல் இருக்க, உலக நாடுகளை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை 1945ல் தொடங்கப்பட்டது. இருப்பினும் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் ஓய்வின்றி செயல்பட்டு தான் கொண்டிருக்கின்றன.இதனால் ஐ.நா சபையின் பொறுப்பு அதிகமானது. உலக நாடுகளிடையே சமாதான முயற்சியை ஏற்படுத்த தீவிரமாக செயல்பட்டது. இத்தகைய முயற்சியின் போது, 1961ல் ஐ.நா பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்து ஒன்றில் பலியானார். இதையடுத்து 1981ஆம் ஆண்டு அவர் மரணித்த செப்டம்பர் மூன்றாம் வார செவ்வாய்க் கிழமை முதன் முதலில் சர்வதேச அமைதி தினமாக ஐ.நா அறிவித்தது.
இந்த தினம் கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் மாற்றப்பட்டது. அன்று முதல் இதே நாளில் சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கல்வி, அறிவியல், பண்பாட்டுத் தொடர்களின் வழியே உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகியவற்றை நிலைநாட்ட ஐ.நாவின் அங்கமாக யுனெஸ்கோ தொடங்கப்பட்டது. இதன் முக்கிய வாசகம் கூறுவது, மனித உள்ளங்களில் தான் போர் தோன்றுகிறது.

அதே மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும் என்பதாகும். உலக அரங்கில் அமைதிக்கான உதாரணங்களில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் காந்தியின் அகிம்சை வழியில், நாடு பெற்ற சுதந்தரத்தை யாரும் மறக்க முடியாது. அகிம்சை கூறுவது அமைதியைத் தான்.

மேலும் 1956ல் ஐ.நா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்தரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற நேரு, அமைதிக்கான பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினார். இந்தக் கொள்கைகள் உலக நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலைநாட்ட, எக்காலத்திற்கும் பொருந்தும்.

1.எந்த நாடும், பிற நாடுகளை தாக்கி துன்புறுத்தக் கூடாது

2.ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது

3.அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் சமத்துவ, பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடுகளாக திகழ வேண்டும்

4.பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை போற்றிக் காக்க வேண்டும்5.ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடன் அமைதியான சகோதரத்துவ முறையில் இணங்கியிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி, வியாபார போட்டி, ராணுவ பலம் ஆகியவற்றால் தற்காலச் சூழல் அமைதியின்மையால் தவித்து வருகிறது. உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மறைமுகமாக தீங்கும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவ்வாறு மீண்டு வருதலே உண்மையான அமைதி என்பதில் சந்தேகமில்லை.

சர்வதேச அமைதிக்காக நீண்ட, நெடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவற்றை எந்தவிதத்திலும் வன்முறை பக்கம் சென்று விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அத்தகைய அமைதியை, அரவணைப்பை நம்மில் இருந்து தொடங்குவோம்...

வாருங்கள் பயணிப்போம் 
#உலகஅமைதியைநோக்கி....❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்