Read it please (மருந்தால் - மறந்தால்) - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Friday, September 20, 2019

Read it please (மருந்தால் - மறந்தால்)

*"மருந்தால் - மறந்தால்"* 




சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்.
சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும்.


*"ஆடம்பரம் - ஆரோக்கியம்"* 


" *ஆடம்பரம்* " அழிவைத்தரும். " *ஆரோக்கியம்* " நல்வாழ்க்கை தரும்.
*"ஆடம்பரமாக - ஆரோக்கியமாக"*
கார் இருந்தால் " *ஆடம்பரமாக* " வாழலாம்.
மீதி வண்டி இருந்தால் " *ஆரோக்கியமாக* " வாழலாம்.


*"பிரச்சனை - அர்ச்சனை"* 

மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால்,
கடவுளுக்கு " *அர்ச்சனை* ".

*"வறுமை - வசதி"* 


" *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.
" *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.

*"வீரன் - கோழை"* 

" *வீரன்* " சாவதே இல்லை.
" *கோழை* " வாழ்வதே இல்லை.

*"வேகமாக - மெதுவாக"* 

தவறான பாதையில் " *வேகமாக* " செல்வதைவிட.
சரியான பாதையில் " *மெதுவாக* " செல்லுங்கள்.

*"ரசிக்க - வசிக்க"* 

நீ " *ரசிக்க* " என்னிடம் அழகு இல்லை. ஆனால்,
நீ " *வசிக்க* " என் இதயத்தில் இடம் இருக்கிறது.

*"தெரியும் - தெரியாது"* : *"தெரியாது - தெரியும்"* 


மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது".
எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்".

*"எதிர்த்து - எதிர்பார்த்து"* 

ஆயிரம் பேரைக்கூட " *எதிர்த்து* " நில்.
ஒருவரையும் " *எதிர்பார்த்து* " நிற்காதே.

*"வாங்கு - வாங்காதே"* 

தேவைக்காக கடன் " *வாங்கு* ".
கிடைக்கிறதே என்பதற்காக " *வாங்காதே* ".

*"சுருக்கமாக - விரிவாக"* 


உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.
பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது.

" *கருப்பு - சிவப்பு* "

" *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
" *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான்.

*"வண்ணங்கள் - எண்ணங்கள்"* 

" *வண்ணங்களில்* " இல்லை வாழ்க்கை.
மனித " *எண்ணங்களில்* " உள்ளது வாழ்க்கை.

*"ஆசை - பேராசை"* 

நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது " *ஆசை* ". ஆனால்,
அதுக்கு பிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது " *பேராசை* ".


*"கடினமாய் - கவனமாய்"* 

" *கடினமாய்* " உழைத்தவர்கள் முன்னேறவில்லை.
" *கவனமாய்* " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.

*"உப்பாக - இனிப்பாக"* 


வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும்.

*"கடனாக - அன்பாக"* 

" *கடனாக* " இருந்தாலும்சரி,
" *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.


*"செலவு - சேமிப்பு"* 

" *செலவு* " போக மீதியை சேமிக்காதே.
" *சேமிப்பு* " போக மீதியை செலவுசெய்.

*"வெற்றி - தோல்வி"* 

உன்னை நீ செதுக்கி கொண்டே இரு " *வெற்றி* " பெற்றால் சிலை, " *தோல்வி* " அடைந்தால் சிற்பி.

*"உயிருள்ள - உயிரற்ற"* 

" *உயிருள்ள* " உறவினர்களில் யார் முக்கியம் என்பதை " *உயிரற்ற* " பணமே முடிவு செய்கிறது.

*"முட்டாள் - புத்திசாலி"* 

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு " *முட்டாள்* " என்று தெரியும்.
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
" *புத்திசாலி* " என்பது புரியும்.

*"போற்றும் - தூற்றும்"* 

பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை " *போற்றும்* ".
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி

" *தூற்றும்* ".
" *பொய் - உண்மை* "

பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் " *பொய்* ".
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே " *உண்மை* ".

*"புத்திசாலி - திறமைசாலி.*

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் " *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் " *திறமைசாலி* ".

*"பாதி - மீதி"* 

" *பாதி* " கவலைகள் கற்பனையானவை.
" *மீதி* " தற்காலிகமானவை.

" *தன்னிடம் - பிறரிடம்* "

குறைகளை " *தன்னிடம்* " தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை " *பிறரிடம்* " தேடுபவன் களங்கப்படுகிறான்.

" *உண்டு - இல்லை* "

அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் " *உண்டு* ".
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் " *இல்லை* ".

*"சத்து - டெத்து"* 

வாழைபழம் சாப்பிட்டால் " *சத்து* ". வாழைப்பழ தொலி வழுக்கி விழுந்தால் " *டெத்து* ".


*"வேதனை - சாதனை"* 


விழுதல் என்பது " *வேதனை* ".
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது " *~சாதனை*~ ".


No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

இந்த வலைப்பதிவில் தேடு:

LIKE OUR FACEBOOK PAGE

நட்பில் இணைந்திருங்கள்