PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்! - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 or 6369381200 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Saturday, September 21, 2019

PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்!

PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்! 



PGTRB 2019 - அதிக தூரத்தில் தேர்வு மையங்கள், தவிப்பில் தேர்வர்கள்! அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர். 


 அரசுப்பள்ளிகளில் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தேர்வு நடத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 


விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து மூன்று விருப்ப இடங்கள் கேட்கப்பட்டன. முதல் தேர்வாக சொந்த மாவட்டம், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். 


ஆனால் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அங்கு செல்ல தேர்வர்களுக்கு அதிக செலவாகும். பெண்கள் துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். இதனால் மன உளைச்சலில் தவிக்கின்றனர். இதுகுறித்து டி.ஆர்.பி., அலுவலகத்தில் தேர்வர்கள் கேட்டபோது, 'ஆன் லைன் தேர்வு என்பதால் சென்னை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில்தான் அந்த வசதி உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்மாவட்ட தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்