Health Tips நலம் தரும் நாடித்துடிப்பு Good pulse - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Friday, September 20, 2019

Health Tips நலம் தரும் நாடித்துடிப்பு Good pulse

நலம் தரும் நாடித்துடிப்பு Good pulse 

*டாக்டர் பஸ்லூர் ரகுமான்MBBS,M.R.SH,,(Londan)D.V..P.hd,(ACU)*



*உறவுகளே மேலும் இந்த பதிவை தொடர்வதற்கு முன்னால் முன்பு வெளியான நாடி பரிசோதனையில் நோயை அறியும் முறையை மீண்டும் ஒருமுறை படித்து நினைவில் பதிய வைத்துக் கொண்டு, பின்னர் இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.*

*இப்போது நாடிப் பரிசோதனையின் மூலம் மேலோட்டமான நாடித்துடிப்பின் தெரியும் ஆறு உறுப்புகளையும், ஆழமாக தெரியும் 6 உறுப்புகளையும் நாம் பரிசோதிக்கும்போது மேலோட்டமாக தொட்டதும் தெரியக்கூடிய நாடியின் ஸ்பரிசத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பாருங்கள்.*


*அதாவது வலது கையில் மேலோட்டமாக தெரியக்கூடிய உறுப்புக்களான பெருங்குடல், வயிறு,தேக வெப்பக் கட்டுப்பாடு உறுப்பிற்கும், இடதுகையில் மேலோட்டமாக தெரியக்கூடிய சிறுகுடல், பித்தப்பை, சிறுநீர்ப்பை உறுப்புகளின் இயக்கத்தை பிரதிபலிக்கும் நாடியை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பாருங்கள்.*


*சிறுகுடல் நாடித்துடிப்பு இல்லையென்றால்.....*

*வலது கையிலும் இடது கையிலும் மேலோட்டமாகத் தெரியும் ஆறு உறுப்புகளின் இயக்கங்களையும் நாடித் துடிப்பின் மூலம் கவனிக்கிறீர்கள். அதாவது நாடித்துடிப்பு எந்த நாடியில் தென்படவில்லையோ அந்த நாடித்துடிப்பு தொடர்புடைய உறுப்பின் இயக்கம் பலவீனம் அடைந்துள்ளது என்று பொருள்.*

*ஆக நாடித்துடிப்பு பரிசோதனையின் முதல் கட்டம் நோயறிதல் இந்த நோயறிதலின் போது வலது, இடது கைகளில் மேலோட்டமான நாடித்துடிப்புகளில் நாடித்துடிப்பு தென்படாத உறுப்பு எது என்பதை அறிதலாகும்.*

*இரண்டாவது கட்டம்: நாடிப் பரிசோதனையில் தடுப்புச்சுவரில் நாடித்துடிப்பு தென்படாத உறுப்பை பார்த்து கொண்டிருப்பது எந்த நாடி அல்லது எந்த உறுப்பு என்பதை மனதில் கொண்டு அந்த உறுப்பு தென்படுகிறதா? என்று பாருங்கள்.*

*உதாரணமாக முதல் கட்டமான நோயறிதலில் சிறுகுடல் நாடித்துடிப்பு இல்லை என்று வைத்துக் கொள்வோம்.*

*தடுப்புச் சுற்றில் சிறு குடலின் இயக்கத்தை பாதிப்பது நீர் மூலப் பொருளைச் சார்ந்த சிறுநீர்பை ஆகும். இரண்டாம் கட்ட நாடி பரிசோதனையில் சிறுநீர்ப்பை இயங்குகிறதா? என்பதை பாருங்கள்.சிறுநீர்ப்பை இயங்குகிறது என்றால் அல்லது சிறுநீர்ப்பை நாடித் துடிப்பை உணர முடிகிறது என்றால் சிறுநீர்ப் பையானது (நீர் மூலப்பொருள்) சிறுகுடலை பாதித்துக் கொண்டிருக்கிறது.நெருப்பு மூலப்பொருளை இயங்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.*

சிறுநீர்ப்பை➡ சிறுகுடல்
*நீர்➡ நெருப்பு*
*UB-60*



*சிறுகுடல் இயக்கம் இல்லாத நிலையில் சிறுநீர்ப்பை இயங்கிக்கொண்டிருக்குமானால் நிச்சயமாக நீர் மூலப்பொருளின் கை ஓங்கி இருக்கிறது.*
*நீர் மூலப்பொருளின் குளிர்ச்சி அதிகரிக்கும்போது நெருப்பு மூலப்பொருளின் வெப்பம் கனிசமாக தணிந்து விடுகிறது. கால்கள் சில்லிட்டு  போகிறது பலருக்கு. இது கை கால்களில் மதமதப்பு உணர்வை தோற்றுவிக்கிறது. இது கை கால் மூட்டுகள் இடுப்பு தண்டு எலும்புகள் உறுதி குலைந்து முதுகு இடுப்பு போன்ற இடங்களில் வலி தலைதூக்குகின்றன.*


*இந்த நீரானது நெருப்பை அணைத்து கொண்டிருக்கும் வேளையில் குளிர்ந்த நீரினால் வெப்பம் ஈர்க்கப்பட்டு உச்சநிலையை அடைகின்றது. நீரின் குளிர்ச்சியை நெருப்பின் வெப்பம் கிரகிப்பதால் இதன் தன்மை கெடுகிறது.*

*நீர் மூலப்பொருளிலிருந்து (சிறு நீர்ப்பை சக்தி நாளத்திலிருந்து) நெருப்பு மூலப்பொருளை பிரிக்க சிறு நீர்ப்பை சக்தி நாளத்தை தேர்வு செய்யுங்கள். பின்னர் இந்த சக்தி நாளத்தில் உள்ள நெருப்பு மூலப்பொருளை ஈர்க்கக்கூடிய அதாவது சிறு நீர்ப்பை சக்தி நாளத்தின் 60 வது புள்ளி(UB-60)யைத் தேர்ந்தெடுங்கள்.*

*இந்தUB-60வது புள்ளிக்கு மேலே அரை அங்குல இடைவெளியில் உங்கள் ஆட்காட்டி விரலை நிலை நிறுத்துங்கள் பத்து அல்லது பதினைந்து வினாடிகள்தான் வைத்தியம் முடிந்துவிட்டது. உங்கள் விரலில் இனம்புரியாத ஒருவித குறுகுறுப்பை உணர்வீர்கள் அவ்வளவுதான்! அந்த கணத்திலேயே வைத்தியம் முடிந்துவிட்டது அவ்வாறு உணர்ச்சியை உங்களால் உணர முடியவில்லை என்றாலும் 15 வினாடிகளுக்கு மேல் வைத்து வைத்தியம் தேவையில்லை போகப்போக நாளடைவில் உங்கள் கைவிரலில் அல்லது உள்ளங்கையில் ஒருவித மாறுபட்ட உணர்வை குறுகுறுப்பாக சூடாகவோ அல்லது வேறு விதமாகவோ உணரும்போது உங்கள் வைத்தியத்தில் நீங்கள் தேர்ச்சி பெற்று வருகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்*

*உங்கள் முயற்சி வெற்றி பெற்று விட்டதா என்பதை இரு வழிகளில் உணரலாம். ஒன்று நோயாளி பத்துப் பதினைந்து வினாடிகளில் தங்கள் துன்பங்களில் இருந்து நிவாரணம் அடைவதாக கூறுவர்.*

*நீங்களும் நோயாளியின் இடதுகையில் முதலாவது நாடியில் நெருப்பு மூலப்பொருளின் வீழ்ச்சியால் மீண்டும் சிறுகுடல் இயக்கம் கொள்வதை உணரலாம்.மேற்சொன்ன இரண்டு வகைகளில் அதாவது நோயாளியின் கஷ்டங்கள் நிவாரணம் அடைந்தாலோ அல்லது நாடித்துடிப்பு மீண்டு விட்டாலோ இவற்றில் எது ஒன்று தென்பட்டாலும் வைத்தியம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்று பொருள்.*

*அடுத்து மீண்டும் அந்நோயாளியை 30 நாட்கள் கழித்த பின்பே, அதுவும் தேவைப்பட்டால் தவிர பார்க்கக்கூடாது.*

*மேற்சொன்ன நாடி பரிசோதனையில் முதல் கட்டத்தில் நாம் நோயறிதலின் போது கண்ட அதே பிரச்சினைக்கு இரண்டாவது கட்டமான தடுப்புச் சுவரில் அதே மாதிரியே "சிறுநீர்பை"(நீர் மூலப்பொருள்) நாடித்துடிப்பு தெரியுமானால்,அதே சமயம் சிறுகுடல் நாடிதுடிப்பு (இடது கை 1வது நாடி) இல்லையெனில், மற்றொரு முறையிலும் சிகிச்சைக்கான புள்ளியை தேர்ந்தெடுக்கலாம்.*

*மேலே உள்ள படத்தைப் பாருங்கள். நீரின் வேகம் தடுக்கப்பட்டாலன்றி"நெருப்பு"மூலப்பொருள் காப்பாற்றப்பட வழியில்லை.எனவே நெருப்பை காப்பாற்ற நீர் மூலப்பொருளின் தாக்கத்தை நெருப்பு மூலப்பொருளில் இருந்து பிரித்து அதனை விலக்க வேண்டும்.*

*இந்த முறையில் நாம் தேர்வு செய்யப்பட வேண்டிய புள்ளி,சிறுகுடல் சக்தி நாளத்திலுள்ள(நெருப்பு மூலப் பொருளிலுள்ள)Small intestine (SI-2) என்ற நீர் மூலப்பொருளுடன் தொடர்புடைய சக்தி புள்ளியாகும். மேற்சொன்னபடி ஆட்காட்டி விரலால்SI-2என்ற அப்புள்ளிக்கு மேலே அரை அங்குல இடைவெளியில் பத்து அல்லது பதினைந்து நொடிகள் நிலை நிறுத்தினால் போதுமானது.*
*இப்போது நோயாளி எந்த கஷ்டத்திற்காக வந்துள்ளாரோ அந்த கஷ்டம் குறைய ஆரம்பிக்கும் அதே நேரம் வைத்தியமும் முடிந்துவிட்டது.*

*இவ்வாறே நெருப்பு மூலப்பொருளின் மற்றொரு உறுப்பான தேகவெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பின், அவ்வுறுப்பு  தொடர்புடைய சக்தி நாளத்தின், நீர் மூலப்பொருளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி புள்ளியான தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு சக்தி நாளத்தின் இரண்டாவது  புள்ளிக்கு (TW-2)சிகிச்சை அளித்தாலும் சிறப்பான மருத்துவச் செயலாகும்.*

*மேலும் அடுத்த பதிவில் பார்க்கலாம் அன்பு உறவுகளே அன்புடன் ஆயர்பாடி முரளீதரன்*

*எல்லா நோய்களுக்கும் நிரந்தரமான தீர்வை பெற தொடர்பு கொள்வீர், ஆயர்பாடி இயற்கை மருத்துவமனை, திருப்பூர், அலைபேசி எண்கள் 9965042543,958543612,8778102307.*


No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்