Breaking News Live: நிலவுக்கு மிக அருகில்.. நெருங்கியது சந்திரயான்- 2 - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

Breaking News Live: நிலவுக்கு மிக அருகில்.. நெருங்கியது சந்திரயான்- 2

Breaking News Live: நிலவுக்கு மிக அருகில்.. நெருங்கியது சந்திரயான்- 2 


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஜூலை 22ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரயான்-2ல் மொத்தம் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும். 



 இந்த ரோவர் ஊர்தி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று தகவல்களை தரையிறங்கு கலனுக்கு அனுப்பும். இந்த தரையிறங்கு கலன் இந்த தகவல்களை நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கும் கலனுக்கு அனுப்பும். இந்த சுற்றுவட்டக் கலன் பூமிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும். சந்திரயான் விண்கலத்தின், 'விக்ரம்' தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 வரும் 7ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியிலிருந்து, 2.30 மணிக்குள் தரையிறங்க உள்ளது. இதுதொடர்பான உடனடி தகவல்களுக்கு இந்த thulirkalvi பக்கத்தில் இணைந்திருக்கவும்.

No comments:

Post a Comment

Please Comment