விரைவில் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போன்களை காற்றிலேயே சார்ஜ் செய்யும் டெக்னாலஜி - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

விரைவில் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போன்களை காற்றிலேயே சார்ஜ் செய்யும் டெக்னாலஜி

விரைவில் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போன்களை காற்றிலேயே சார்ஜ் செய்யும் டெக்னாலஜி 


தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களை வயர்லஸ் முறையல் சார்ஜ் செய்யும் முறைகள் பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மேலும் கண்ணுக்கு தெரியாத நிலையில் மாற்ற தேவையான பல்வேறு பணிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜிகளுக்கு ஆகும் செலவு கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதுடன், மார்கெட்டில் இந்த சார்ஜிங் முறைக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுமட்டுமின்றி மெட்ரோ நகரங்களில் வசதித்து வரும் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இந்த டெக்னாலஜியை அதிகளவில் ஏற்று கொண்டு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்துபவர்கள், ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய எந்த ஒரு கேபிளை தேடி அதை பிளக்கில் சொருக வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி இந்தியாவில் அண்மையிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து டொரெட்டோ சில்லறை பிரைவேட் லிமிடெட் லிமிடெட், இயக்குநர் காரேஷ் லலித் பேசுகையில், பெருமபளன மொபைல் போன் தயாரிப்பாளர்கள், படிபடியாக வழக்கமான சார்ஜிங் முறைகளுக்கு பதிலாக வயர்லெஸ் சார்ஜிங் முறைக்கு மாற தொடங்கி வருகின்றனார். இதன் மூலம் இந்த ஆண்டில், வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி பெரியளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது என்றார்இதுகுறித்து மேலும் பேசிய அவர், வயர்லெஸ் சார்ஜிங் முறையை மேம்படுத்த தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளும் அடுத்த வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. நமது வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக பொருட்களில் 50 விழுக்காடு பொருட்கள் சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையிலேயே உள்ளன. 


அதனால் இந்த் வயர்லெஸ் டெக்னாலஜி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்த டெக்னாலஜி முதலில் ஹவாய் மேட் 20 புரோ ஸ்மார்ட்போனில் அறிமும் செய்யப்பட்டது. தொடர்ந்தூ சாம்சங் எஸ்10 மற்றும் நோட் 10 சீரிஸ்களில் பயன்படுத்தப்பட்டது.ஐபோன்களை பொறுத்தவரை iPhone 8, 8 Plus, X, XR, XS மற்றும் XS Max போன்ற போன்கள் வயர்லஸ் டெக்னாலஜி மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி சில ஸ்மார்ட்வாட்ச்கள், அதாவது ஆப்பிள் வாட்ச், மோட்டோ 360, எல்ஜி வாட்ச் ஸ்டைல் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்கள் வயர்லெஸ் டெக்னாலஜியை பயன்படுத்துகின்றன. 
இதுமட்டுமின்றி நெக்சஸ் டேப்லெட்களும் இந்த் சார்ஜிங் முறையி பயன்படுத்துகிறது. அடுத்த ஆண்டு முதல், சிறந்த வயர்லெஸ் சார்ஜ்ஜர்கள் "Qi" சார்ஜராக மாற்றப்பட உள்ளது. "Qi" என்பது ஆசிய கொள்கைகளில் இருந்து பெறப்ட்டதுடன், விர்சுவல் எனர்ஜி என்ற பொருள் கொண்டது. "Qi" சார்ஜ்ஜர்கள் வயர்லெஸ் சார்ஜர் போன்று செயல்பட்டாலும், சார்ஜ் செய்யப்படும் டிவைஸ்சை 45 mm தள்ளி வைத்தே சார்ஜ் செய்ய முடியும். 
மேலும் இந்த சார்ஜர்கள் குறைவான பவ்ரிலேயே இயக்கும். இதனால், இனி வரும் காலங்களில் வரும் வயர்லெஸ் சார்ஜி முறைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் நிலையிலோ அல்லது காற்றில் இருக்கும் நிலையில் வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது

No comments:

Post a Comment

Please Comment