செக்கிழுத்த செம்மல்'; இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

செக்கிழுத்த செம்மல்'; இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்

செக்கிழுத்த செம்மல்'; இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம் 


சுதந்திர போராட்ட வீரர், மொழி பெயர்ப்பாளர், நுாலாசிரியர், பத்திரிகையாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் வ.உ.சிதம்பரம். அரசியல் வாழ்விலும், தமிழ்ப்பணியிலும் தன்னிகரற்று திகழ்ந்தார். 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' என புகழப்படும் இவர் துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்.5ல் பிறந்தார். சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். பின் 1890களில் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு, சுதேசி இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். 


கைத்தறி ஆடைகளுக்காக தர்ம சங்க நெசவுச்சாலையையும், சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி கடைகளையும் துவக்கினார். ஆங்கிலேயருக்கு சவால்: துாத்துக்குடி-- கொழும்பு போக்குவரத்தில் ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் ஏகபோக உரிமையை அனுபவித்து வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக இரண்டு புதிய கப்பல்களுடன் 1906ம் ஆண்டு களத்தில் இறங்கினார். 


உள்ளூர் வணிகர்களின் ஆதரவு இருந்ததால், சுதேசி நீராவி கப்பல் போக்குவரத்து கம்பெனி சிறப்பாக செயல்பட்டது.பாரதியாருடன் நட்பு பாராட்டிய இவர், 1907ல் நடந்த சூரத் காங்., மாநாட்டில் அவருடன் கலந்து கொண்டார். இது தவிர துாத்துக்குடியில் கோரல்மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கொடுத்தார். இவரது நடவடிக்கைகள் ஆங்கிலேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இதனால் கலகம் விளைவித்தார் என குற்றம் சாட்டி 1908ல் கைது செய்யப்பட்டார். 


இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.சிறையில் அவர் அரசியல் கைதியாக நடத்தப்படவில்லை. செக்கிழுத்தல் உள்ளிட்ட கடும் சித்ரவதைகளுக்கு ஆளானார். 1912ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்த காலத்தில் அவரது கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரால் முடக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் சிறிது காலம் வணிகம், அரசியல், வழக்கறிஞர், நுால் எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். 1936, நவ. 18ல் காலமானார்.

No comments:

Post a Comment

Please Comment