மாணவிகள் உருவாக்கிய செயலி! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாணவிகள் உருவாக்கிய செயலி!

மாணவிகள் உருவாக்கிய செயலி! மக்களின் அன்றாடத் தேவைகளையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக வைத்து தினந்தோறும் ஏராளமான செயலிகள் (ஆப்கள்) உருவாக்கப்படுகின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது மனிதர்களின் வாழ்வில் எந்த அளவுக்குச் செயலிகள் ஊடுருவி உள்ளன என்பதைக் காண்பிக்கிறது. 
இந்த போட்டிச் சூழலில் தலைநகர் தில்லி அருகே உள்ள நொய்டாவில் 12 - ஆம் வகுப்பு படிக்கும் அனன்யா குரோவர், வன்சிகா யாதவ், வசுதா சுதிந்தர், அனுஷ்கா ஷர்மா, ஆரிபா ஆகிய 5 மாணவிகள் உருவாக்கிய Maitri எனும் செயலி அமெரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான உலகின் நவீன தொழில்நுட்பப் போட்டியில் பரிசு வென்றுள்ளது. அப்படி என்னதான் அந்தச் செயலியின் பயன்பாடு என்பதைப் பார்ப்போம். பாசத்துக்காக ஏங்கும் கைவிடப்பட்ட குழந்தைகளையும், தனிமையில் வாழ்வைக் கழிக்கும் முதியோர் இல்லங்களையும் சமூகத்துடன் இணைப்பதுதான் இந்தச் செயலியின் செயல்பாடு. 


இந்த செயலியில் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும், முதியோர் இல்லங்களும் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைகள், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது வரை இந்த செயலியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 13 முதியோர் இல்லங்களும், 7 ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் பதிவு செய்துள்ளன. இந்த செயலியில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் நிதி அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது."பகிர்ந்து கொண்டால்தான் சமூக நலம் ஏற்படும் என்ற மையப் பொருளின் மூலம் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளனர் என்பதை வலியுறுத்தவும் இந்தச் செயலியை நாங்கள் உருவாக்கினோம். தற்போது இது தில்லி, அதன் அண்டை மாநிலங்களான என்சிஆர் பகுதிகளுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதனை நாடு முழுவதும் இணைக்கும் செயலியாக மாற்ற உள்ளோம்'' என்று பெருமையுடன் கூறுகிறார்கள் பள்ளி மாணவிகள். நிகழாண்டில் ரூ. 27 லட்சத்தை கூட்டு நிதி மூலம் பெற்று ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் பகிர்ந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். - அ.சர்ஃப்ராஸ்

No comments:

Post a Comment

Please Comment