மத்திய கல்வி உதவித் தொகையை பெற கல்லூரிகள் பதிவு செய்வது அவசியம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 18, 2019

மத்திய கல்வி உதவித் தொகையை பெற கல்லூரிகள் பதிவு செய்வது அவசியம்

மத்திய கல்வி உதவித் தொகையை பெற கல்லூரிகள் பதிவு செய்வது அவசியம் 


மத்திய கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பெற அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மத்திய இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு இயக்குநரகம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதற்கு www.scholarships.gov.in என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் இந்தக் கல்வி உதவித் தொகையைப் பெற வேண்டும் என்றால், அதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் கல்வி உதவித் தொகை வலைதளத்தில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளார். எனவே, பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இந்த பதிவை மேற்கொண்டு, அதுகுறித்த விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment