அணையும் நெருப்பு; உயரும் தண்ணீர் - விளக்கம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

அணையும் நெருப்பு; உயரும் தண்ணீர் - விளக்கம்

அணையும் நெருப்பு; உயரும் தண்ணீர் - விளக்கம் 


மெழுகுவர்த்தி எரியும்போது காற்று (ஆக்சிஜன்) முழுவதையும் நெருப்பு உறிஞ்சிக்கொள்வதால் டம்ளருக்குள் வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே நீர் டம்ளருக்குள் செல்கிறது என்று கொடுக்கப்பட்டிருந்தது. டம்ளருக்குள் காற்றின் அழுத்தம் குறைந்ததால்தான் தண்ணீர் மேலே ஏறியது என்பது சரி. மெழுகுவர்த்தி எரியும்போது அதன் சுடரைச் சுற்றியுள்ள காற்றும் சூடாகும். சூடான காற்று விரிவடையும். விரிவடையும்போது காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் எரியும் மெழுகுவர்த்தியை டம்ளரால் மூடுகிறோம். டம்ளருக்குள் இருந்த ஆக்சிஜன் முழுவதும் எரிந்து முடித்தவுடன் மெழுகுவர்த்தி அணைந்து விடுகிறது. மெழுகுவர்த்தி அணைந்தவுடன் டம்ளருக்குள் இருக்கும் காற்றின் வெப்பநிலை குறையும். வெப்பம் காரணமாக விரிந்த காற்று இப்போது சுருங்குவதால் டம்ளருக்குள் காற்றழுத்தம் குறைகிறது. 
அதேநேரம் வெளிப்புறக் காற்று தண்ணீரை அழுத்துவதால் அழுத்தம் குறைவாக உள்ள டம்ளருக்குள் தண்ணீர் செல்கிறது. காற்று வெப்பத்தால் விரிவடைகிறது, வெப்பம் குறைந்தவுடன் சுருங்குகிறது என்பதையும் காற்றின் அழுத்தத்தையும் விளக்கும் ஆய்வு இது. - 


தேமொழிச்செல்வி, 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

No comments:

Post a Comment

Please Comment