தலைமைப்பண்பு என்பது எப்படி இருக்க வேண்டும்? இதோ உங்களுக்காக!!! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

தலைமைப்பண்பு என்பது எப்படி இருக்க வேண்டும்? இதோ உங்களுக்காக!!!

தலைமைப்பண்பு என்பது எப்படி இருக்க வேண்டும்? இதோ உங்களுக்காக!!! 

✅தலைமைப் பண்பு அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு குழுவை நிர்வகிப்பதற்கு தலைமைப்பண்பு மிகவும் அவசிய தேவையாகும். கூட்டம் என்பதற்கும், குழு என்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. கொள்கை மற்றும் செயல்பாட்டை கொண்டது குழு. இந்த குழுவை நிர்வகிப்பதுதான் தலைமைப்பண்பு. ஏனெனில் தலைமைப் பண்பை முடிவெடுப்பது, செயல்படுத்துவது என்ற கோணத்தில் பார்க்கலாம். ✅கொள்கைகளை செயல்படுத்துவதற்கும், அதற்கான வழியை சரியான முறையில் காட்டுவதற்கும் தலைமைப்பண்பு மிகவும் முக்கியமானதாகும். அப்படிப்பட்ட தலைமைப் பண்பை வளர்ப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தலைமைப் பண்பு என்றவுடன், அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று பலரும் ஒதுங்கி விடுகின்றனர். ✅தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நபர் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வை அடைகிறார். தலைமைப் பண்பை வளர்க்காமல் தலைமைப் பொறுப்பை அடைந்த ஒரு சிலரும் அந்தத் திறனை மெருகேற்றாததன் விளைவாக நிர்வாகத்தில் தோல்வியை சந்திக்கின்றனர். அப்படி என்றால் தலைமைப்பண்பை வளர்த்துக் கொள்ள தேவை சிறந்த பயிற்சி. அந்த பயிற்சியை மிகவும் சிறந்த முறையில் அளித்து வருகிறார் பரத் சுரேந்திரன். ✅இவர் மிகச்சிறந்த நிர்வாக திறன் கொண்ட நிறுவனங்கள் அமைய பயிற்சிகள் கொடுத்தவர். தலைமைத்துவம் கொண்டவர்களை உருவாக்கியவர். பல ஆண்டுகளாக தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு தேவையானவை குறித்து சிறந்த பயிற்சி அளித்தவர். மேலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வளர்ச்சி அடைய தேவையான வழிகாட்டுதல்களையும் அளித்து வருகிறது. ✅இவரது நுணுக்கமான பயிற்சிகளால் பலரும் இன்று நிர்வாகத்திறமையில் மிளிர்கின்றனர். மிக முக்கியமாக தலைமைப்பண்புகள் மேம்பட சிறப்பான பயிற்சிகள் அளிக்கிறார். தலைமைப்பண்புக்கு மிக முக்கிய தேவைகள் பற்றி பயிற்சி அளிக்கிறார். தொழிலாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி... வெற்றி பெற வேண்டுமென்றால் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது மிகவும் அவசியமானதாகும். ✅புதுப்புது தொழில்நுட்பங்களும், தொழில்முறைகளும், துறை சார்ந்த உட்பிரிவுகளும் தொடர்ந்து அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவை பற்றி அக்கறை கொள்ளாமல் இருந்தால் பின் தங்கியவர்களாகி விடுவோம். ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுதல் என்பது அவசியமானதாகி விடுகிறது. 
✅தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தன்னுடன் இணைந்து பணியாற்றும் சக ஊழியர்கள் சோர்வின்றியும், கால விரயமின்றியும் வேலைத்திட்டங்களை விரைவாகவும், பிழைகளின்றியும் முடிப்பதற்கு எளிதான முறைகளை அறிந்து, அதனை பிற ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வேலைகளை முடிக்கவேண்டும். இது தலைமைப்பண்பின்றி மிகவும் முக்கியமான ஒன்றாகும்No comments:

Post a Comment

Please Comment