முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு! முதல்முறையாக ஆன்லைன் தேர்வு - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 18, 2019

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு! முதல்முறையாக ஆன்லைன் தேர்வு

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு! முதல்முறையாக ஆன்லைன் தேர்வு 


தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம் போட்டித் தேர்வு மூலமும் நிரப்பப்பட்டு வரும் நிலையில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்பம் முடிந்த நிலையில் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு வரும் 27, 28, 29-ம் ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதுநிலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு இணையதளம் வழியாக நடைபெறும் என்றும், மொத்தம் 17 பாடங்கள் கொண்ட தேர்வுக்கால அட்டவணை தேர்வு வாரிய இணையத்தில் (https://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர் தேர்வு முதல்முறையாக இணையதளம் வழியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment