தடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination) - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination)

தடுப்பூசி பற்றிய தகவல்கள் (Information about vaccination)1. குழந்தை பிறந்தவுடன்:♣ காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

2.ஒன்றரை மாதத்தில்:


♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

3.மூன்றரை மாதத்தில்:


♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

4.நான்கரை மாதத்தில்:


♣ போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

5.ஐந்தரை மாதத்தில்:


♣ போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

6.ஒன்பதாவது மாதத்தில்:


♣ தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.ஒன்றே கால் வயதில்:


♣ தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

8.ஒன்றரை வயதில்:


♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) போட்டுக்கொள்ள வேண்டும்.

9.நாலரை வயதில்:


♣ டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.

★இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முறையாக பின்பற்றுவது மிகவும் அவசியம்.

குறிப்பு :

மேற்கண்ட தகவல்கள் உண்மையானதுதானா என்று பெற்றோர்கள் ஒருமுறை தங்களது குடும்ப / குழந்தை நல மருத்துவரிடம் சரிபார்த்துக்கொள்வது நல்லது . 

உங்கள் பிள்ளைகளின் நலனில் 

துளிர்கல்வி.கம்No comments:

Post a Comment

Please Comment