சூரியகாந்தி வயலில் பாடம்! - ஆசிரியர்களைக் கொண்டாடிய மாணவர்கள் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

சூரியகாந்தி வயலில் பாடம்! - ஆசிரியர்களைக் கொண்டாடிய மாணவர்கள்

சூரியகாந்தி வயலில் பாடம்! - ஆசிரியர்களைக் கொண்டாடிய மாணவர்கள் திருச்சி மணிகண்டம் பகுதிகளில் உள்ள வயல்களில் சூரியகாந்தி மலர்ந்து காட்சியளிக்கிறது. அந்தப் பக்கம் செல்லும் வாகன ஓட்டிகள், வண்டியை ஓரங்கட்டிவிட்டு, செல்போனில் க்ளிக் செய்தபடி கடக்கிறார்கள். 


திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள பள்ளக்காடு கிராமத்தில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர் விளைந்துள்ள வயலுக்கு அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள்tk உஷாராணி, சசிகலா சகிதமாகத் திரண்டு வந்தனர்.சூரிய காந்தி வயல் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசித்த மாணவர்கள், 7-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், சூரியகாந்தி தனிமலர் இல்லை, பல மலர்கள் ஒன்றிணைந்து உருவான தொகுப்புதான் சார் என்றும், சூரியகாந்தியை மஞ்சரி'னு சொல்லலாம்ல சார் எனச் சந்தேகம் கேட்டபடி வயலைச் சுற்றி வந்தனர். மாணவர்கள் கேட்டக் கேள்விகளுக்கு ஆசிரியர்கள், சூரியகாந்தியைப் பார்த்தபடி விளக்கிச் சொல்ல, சந்தோஷத்தில் தலையசைத்த மாணவர்கள், அப்படியே வயலுக்குள் நுழைந்து மலரைப் பறிக்காமல் போட்டோஸ் எடுத்துத் தள்ளினர். கூடவே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், தங்கள் ஆசியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.ஆசிரியரை பாராட்டும் மாணவர்கள்தலைமை ஆசிரியர் ஜெயந்தியை பாரட்டும் மாணவர்கள் நல்லாசிரியருக்குப் பாராட்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகஅரசு, தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது அறிவித்தது. அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 13 பேர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி எடமலைப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தியும் ஒருவர். அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், அடுத்த சில நிமிடங்களில் பள்ளியே விழாக்கோலம் பூண்டது. 


ஆசியர்களைவிட மாணவர்கள் துள்ளிக் குதித்தனர். கடந்த சில வருடங்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தனியார் பள்ளியில் இருந்து தங்களது அரசுப் பள்ளிக்குச் சேர்த்து தரமான கல்விக்கு வழிவகுத்தவர் ஜெயந்தி, அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பதால், பள்ளியின் முன்பு திரண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கையெடுத்துக் கும்பிட்டும், கரவொலி எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பரிசளிக்கும் மாணவர்கள் 


திருச்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், இன்று ஆசிரியர் தினம் என்பதால், தங்கள் ஆசிரியர்களுக்குப் பரிசுகள் மற்றும் வாழ்த்துகள் தெரிவித்து தங்களின் அன்பை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள், ரோஜா, பேனா உள்ளிட்டவற்றை வழங்கி ஆசிரியர்களைப் பாராட்டு மழையில் நனைய வைக்கிறார்கள். இதனால் பள்ளிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழ்த்துகள் ஆசியர்களே..

No comments:

Post a Comment

Please Comment