அன்னை தெரசாவின் அமுதமொழிகள்! - அன்னை தெரசா நினைவுநாள் இன்று - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அன்னை தெரசாவின் அமுதமொழிகள்! - அன்னை தெரசா நினைவுநாள் இன்று

அன்னை தெரசாவின் அமுதமொழிகள்! - அன்னை தெரசா நினைவுநாள் இன்று 
அன்புக்கும் கருணைக்கும் உடலும் உயிரும் கொடுத்து, உதாரண மனுஷியாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா. அவரின் நினைவுநாள் இன்று (5.9.19). இந்த நாளில், அன்னை தெரசாவின் அமுத மொழிகளை ஏற்று நடப்போம். பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு அருகே நீங்கள் செல்வீர்கள். அதேசமயம், மக்களுக்குச் சேவை செய்து பாருங்கள். கடவுளே உங்களுக்கு அருகிலேயே வருவார். 


 * மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தால், ஒருபோதும் உங்களுக்கு அன்பு செய்ய வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. 

 * இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள். 

 * இறப்பதற்காகத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்துடன் வாழ்வோம். 

 * அன்பு என்பது சொற்களைக் கொண்டு வாழ்வதாக நினைக்கிறோம். ஆனால் அன்பை, சொற்களால் விளக்க முடியாது. செயல்களால் உணர்த்துவதே அன்பு. 

 * உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்களை நேசியுங்கள். உங்கள் மீது கோபம் கொண்டவர்களை இன்னும் அதிகமாவே நேசியுங்கள். 

* மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும். * கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை. 

 * கொடுப்பது சிறியதுதானே என்று தயங்காதீர்கள். ஆனால் பெறுபவருக்கு அது மிகப்பெரியது. அதற்காக எடுப்பது சிறிது என்று திருடாதீர்கள். அது இழந்தவருக்கு மிகப்பெரியது என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

 * உனக்காக வாழ்கிறேன் என்று சொல்லுவது நமக்கு இன்பம். உன்னால்தான் வாழ்கிறேன் என்று நம்மைப் பார்த்துச் சொல்லவைக்கும்படி வாழ்வது பேரின்பம். 


 * வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.No comments:

Post a Comment

Please Comment