விரைவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் - துளிர்கல்வி

Latest


♨Dear New Admins Please add this number 9629345493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Saturday, September 21, 2019

விரைவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம்: அமைச்சர்

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

3 வாரங்களுக்குள் 500 மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் 


💊தமிழகத்தில் மூன்று வாரங்களுக்குள் 500 அரசு மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள், 510 தொழில்நுட்ப ஊழியர்கள், 310 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடங்களில், மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய, அதிநவீன விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (தாய்), இருதய சிறப்பு சிகிச்சைக்கான ஆய்வகம் (கேத் லேப்) ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

💊மருத்துவக் கல்லூரி முதல்வர் கோ.சங்கரநாராயணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் புதிய மையங்களை திறந்து வைத்தனர். விழாவில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: 


💊தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான விழுப்புரத்தில், உலக தரத்திலான அதிநவீன மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மையம் ரூ.75 லட்சம் மதிப்பில் தாய் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக விழுப்புரத்தில்தான். 


💊இந்த அதிநவீன அவசரச் சிகிச்சை மையம் முன்மாதிரியாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அவசரச் சிகிச்சை மையம் 24 மணி நேரமும் சிறப்பான முறையில் செயல்படும். 0 நிமிடம் கூட தாமதிக்காமல் அவசர சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த மையம் செயல்படும். மேலும், ரூ.3.5 கோடி மதிப்பில் ஆய்வகத்துடன் கூடிய இருதய அறுவைச் சிகிச்சை மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 


💊இப்பகுதி மக்கள் இருதய அறுவை, ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட் போன்ற சிகிச்சைகளுக்காக, சென்னை, புதுவைக்கு செல்ல வேண்டியதில்லை. இங்கேயே சிறப்பான சிகிச்சையை மேற்கொள்ளலாம். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 பிரசவங்கள் நிகழ்கின்றன. சிகிச்சைக்காக தினமும் 3ஆயிரம் பேர் வருகின்றனர். ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். 


💊இந்த அவசியம் கருதியே உடனடியாக ரூ.12 கோடி நிதியில் புதிய தாய்-சேய் நல மையங்களுக்கான கட்டடங்கள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 6 மாதங்களில் ரூ.8 கோடி மதிப்பில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும். மேலும், டெங்கு போன்ற வைரஸ் நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ரூ.1.82 கோடி மதிப்பில் புதிய "வைரல் லேப்' தொடங்கப்படவுள்ளது. கூடுதலாக, சி.டி. ஸ்கேன் மையமும் அமைக்கப்படவுள்ளது. இந்தக் கல்லூரியில் உயர் மருத்துவப் படிப்புகளுக்காக (எம்டி, எம்எஸ்) 40 சேர்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


💊இங்கு புதிய செவிலியர் கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது. இன்னும் மூன்று வாரங்களுக்குள் சுகாதாரத் துறையில் 500 மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள், 510 தொழில் நுட்ப ஊழியர்கள், 310 சுகாதார ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு நியமனம் நடைபெறவுள்ளது என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 💊 விரைவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம்: அமைச்சர்  

LABEL : MEDICAL NEWSNo comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .