வீட்டில் மறந்துவிட்டு வந்த பொருட்களை எடுத்து வரும் ஸ்விகி! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

வீட்டில் மறந்துவிட்டு வந்த பொருட்களை எடுத்து வரும் ஸ்விகி!

வீட்டில் மறந்துவிட்டு வந்த பொருட்களை எடுத்து வரும் ஸ்விகி! 


ஸ்விகி நிறுவனம் தனது ஆப்பில் ஸ்விகி கோ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, பயனர்கள் சலவைக்குத் துணியைக் கொடுக்கலாம், வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்த அனைத்துப் பொருட்களையும் நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைத்துக் கொள்ளலாம்.  5 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஸ்விகி. உணவு டெலிவரி செய்வதில் முன்னிலை வகிக்கும் இந்நிறுவனம் தற்போது அனைத்துப் பொருள்களையும் விநியோகிக்க உள்ளது. இந்த வசதி தற்போது பெங்களூருவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மளிகைப் பொருட்கள், காய்கறிகள் டெலிவரி செய்யும் வசதியை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் ஸ்விகி அறிமுகப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வசதிகளை அடுத்த ஆண்டுக்குள் 300 நகரங்களுக்குக் கொண்டுச் செல்லத் திட்டமிட்டுள்ளது ஸ்விகி. அதேபோல் ஸ்விகி ஸ்டோரும் திறக்கப்படவுள்ளது. தற்போது இது குருகிராம் (குர்காவ்ன்), பெங்களூரு மற்றும் ஹைதரபாத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. 

அடுத்த ஆண்டுக்குள் இவை இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ நகரங்களிலும் திறக்கப்படும் என ஸ்விகி உறுதியளித்துள்ளது. இதே போன்று கூகுளின் புதிய ஸ்டார்ட் அப்பான டன்சோவும் அனைத்துப் பொருள்களையும் நமக்காக வாங்கி வரும் சேவையை செய்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment