மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்.. நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்.. நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து!

மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்.. நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து! 

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார். ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் ஆசிரியர்களை நினைவு கூறுவதோடு, ஆசிரியர் தின வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகல் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். ஹாலிவுட்டில் கால் பதிக்கும் நெப்போலியன் அங்கேயும் மீசையை முறுக்குவாரா அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment