போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Friday, September 6, 2019

போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்று சரிபார்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்கள் மற்றும் சான்று சரிபார்ப்பு , நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்று சரிபார்ப்பு தேதி மற்றும் அது தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது. 


அதன்படி, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திட்டத்தின் துணைப் பணிகளுக்கான வரைவாளர் கிரேடு 3, பணியிடங்கள் 53க்கு கடந்த பிப்ரவரி 3ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. அதில் 2411 பேர் எழுதினர். அவர்களில் 110 பேர் சான்று சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 16, 17ம் தேதிகளில் இவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடக்கிறது.  தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை துணைநிலைப் பணிகளில் நிர்வாக அலுவலர் கிரேடு 3க்கான 105 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 16ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. அதில் 46 ஆயிரத்து 316 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 213 பேர் சான்று சரிபார்ப்பு மற்றும் வாய்மொழித் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 18, 19, மற்றும் 20ம் தேதிகளில் வாய்மொழித் தேர்வு நடக்கிறது. சமூகபாதுகாப்பு துறை பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட உதவி கண்காணிப்பாளர் பணியிடங்கள் 4க்கு கடந்த மே 5ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. மொத்தம் 106 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள 12ம் தேதி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 95 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு மீன்வளத்துறையில் சோதனைக்கூட உதவியாளர் பணி 1க்கு கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. அதில் 369 பேர் எழுதினர். அவர்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

இந்த வலைப்பதிவில் தேடு:

LIKE OUR FACEBOOK PAGE

நட்பில் இணைந்திருங்கள்