வெயிலோடு விளையாடு: பள்ளி கல்வித்துறை! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 4, 2019

வெயிலோடு விளையாடு: பள்ளி கல்வித்துறை!

வெயிலோடு விளையாடு: பள்ளி கல்வித்துறை! பள்ளி மாணவர்களை வெயிலில் விளையாட வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது மாணவர்களின் சோர்வைப் போக்கும் விதமாகவும், மாணவர்களிடையே 'வைட்டமின் டி' குறைப்பாட்டை தவிர்க்கவும் மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 
 மேலும், ஓய்வு நேரங்கள், இடைவேளைகளில் திறந்த மைதானங்களில் சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்குமாறு குறிப்பிட்டுள்ளதோடு, இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கும் படி பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment