ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 4, 2019

ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு!

ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு! நீட் மற்றும் ஜே.இ.இ போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதை தடுக்க தமிழக அரசு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், பள்ளிகளிலேயே நீட் வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகநீட் மற்றும் ஜே.இ.இ போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காகஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கு 320 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுகின்றனர்.வரும் செப்.6,7 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Please Comment