கேஸ் சிலிண்டர் வெடிப்பது ஏன்? இதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது? பயனுள்ள தகவல். - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Tuesday, September 3, 2019

கேஸ் சிலிண்டர் வெடிப்பது ஏன்? இதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது? பயனுள்ள தகவல்.

கேஸ் சிலிண்டர் வெடிப்பது ஏன்? இதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது? பயனுள்ள தகவல். இன்று நம் அனைவர் வீட்டிலும் பயன்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகிவிட்டது கேஸ் சிலிண்டர். சில நேரங்களில் நமது கவனக்குறைவால் கேஸ் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. கேஸ் சிலிண்டர் வெடிக்க முக்கியமான காரணங்கள் என்னென்ன? அதை எப்படி தடுப்பது? வாங்க பாக்கலாம்.  இரவு நேரங்களில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்திவிட்டு ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் தூங்க சென்றுவிடுகிறோம். அவ்வாறு ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் செல்வது தவறு. இதன் மூலம் கேஸ் லீக்காக வாய்ப்புள்ளது. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன் (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும்.இவைதான் நமக்கு அடுப்பு வழியாக கேஸாக வெளியே வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது அதனை நமக்கு உணர்த்த மெர்கேப்டன் என்ற திரவம் சேர்க்கப்பட்டிற்கும். இது ஒருவிதமான வாடையை உருவாக்கி கேஸ் லீக்காவதை நமக்கு உணர்த்தும். கேஸ் பயன்படுத்தும் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஓன்று கேஸ் அடுப்பில் பால் அல்லது சமையல் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க சென்றுவிடுவார்கள். பால் பொங்கி கீழே வழியும் போது அது அடுப்பில் பட்டு தீயை அனைத்துவிடும். ஆனால், கேஸ் வெளியேறிக்கொண்டுதான் இருக்கும்.  இவ்வாறு அதிக அளவில் வெளியாகும் கேஸ் வீடு முழுவதும் பரவி விபத்தை உண்டாக்குகிறது. கிச்சனில் ப்ரிட்ஜ், மைக்ரோவோன் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதில் இருந்து வெளியேறும் ஒருசில ஸ்பார்க் கேஷில் பட்டு விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.கேஸ் சிலிண்டரை மரப்பெட்டி இவற்றில் பூட்டி வைப்பது தவறு. கேஸ் லீக் ஆனால் நமக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் சொல்லி, புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற டியூபுகளை பயன்படுத்துவதனால் கூட கேஸ் லீக்காக அதிக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Please Comment