ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? உஷார் - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Wednesday, September 18, 2019

ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? உஷார்

நம் வாழ்கையில் இன்றியமையாததாக இருப்பது கூகிள் சர்ச் என்ஜின் என்றால் அது மிகையாகாது. உதரணாமாக, கூகுளில் நீங்கள் ரஜினி என்று டைப் செய்தால்- ரஜினி ஆடியோ, வீடியோ, இமேஜ் போன்றவைகள் வரும். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்னவென்றால்- இந்த இமேஜ்,ஆடியோ, வீடியோ எல்லாம் கூகுளுக்கு சொந்தமானது அல்ல. நீங்களும், நானும் ரஜினியைப் பற்றிய தகவல்களை உருவாக்கி வைக்கிறோம் . இந்த ரஜினி டேட்டாவை வருசைப்படுத்துவதே கூகுளின் வேலை . இன்னும், சுருங்கச் சொன்னால் நான் தான் ரஜினி என்பதை என்னால் கூகிளை நம்ப வைக்க முடியும். எனவே, சிலர் உங்களை ஏமாற்றுவதற்காக போலி அடையாளங்களை உருவா


க்கி கூகிள் சர்ச்சின் மூலம் உங்களை ஏமாற்ற முடியும். உதரணமாக , //orangebank.net( கற்பனை வங்கி) என்பது நான் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு பயனடுத்தப்படும் இணையதளம். சைபர் திருடர்கள் என்ன செய்வார்கள் என்றால் //oragebank.net(போலியான இணையதளம்) என்ற இணையத் தளத்தை வாங்குவார்கள். இரண்டாவது இணையதளத்தில் (n) இல்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்த போலியான இணையதளத்தை உண்மையான இணையதளத்தில் இருக்கும் அதே கலர், லே அவுட், மெனு ஸ்டைல், உண்மையான வங்கியின் லோகோ போன்ற வற்றை அப்படியே காப்பி அடித்து வைத்திருப்பார்கள் . நான் orangebank என்று கூகுளில் பொதுவாக டைப் செய்யும்போது, //orangebank.net, //oragebank.net என்ற இரண்டையுமே கூகிள் காட்டும் . 

நான் அவசரத்தில் //oragebank.net ( போலி இணையத்தளம்) என்ற இணையதளத்திற்கு சென்று அவசர அவசரமாக உங்கள் யூசர் எண் மற்றும் கடவு சொல்லை பதிவு செய்து விடுவீர்கள். பின்பு, உங்கள் யூசர் எண் மற்றும் கடவு சொல்லை சைபர் திருடர்கள் அவர்கள் டேட்டா பேசில் சேமித்து வைத்துக் கொண்டு, உண்மையான //orangebank.net என்ற இணையத்தளத்திற்கு சென்று எனது யூசர் எண் மூலம் எனது அக்கவுண்டிற்குள் உள்சென்று இருக்கும் பணத்தை அவர்கள் அக்கவுன்ட்டில் மாற்றி விடுவார்கள். 


 எனவே, கூகுளில் உங்களை ஏமாற்ற ஆயிரம் வழிகள் உள்ளன. கம்பெனியின் கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடாதீர்கள் , அப்ஸ் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கூகுளில் தேடாமல் , ஒரிஜினல் ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்யுங்கள், ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் கூகிளில் நிறைய இருக்கும் எல்லா வற்றையும் உங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்