மிசோரம் மாணவர்கள் வினோத உறுதிமொழி - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மிசோரம் மாணவர்கள் வினோத உறுதிமொழி

மிசோரம் மாணவர்கள் வினோத உறுதிமொழி 


மிசோரத்தில், முதல்வர் ஸோரம் தங்கா தலைமையில், மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு, சட்டப்பிரிவு, 371ன் கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
இதன்படி, மாநில அரசின் அனுமதி இன்றி, மதம் மற்றும் கலாசார பழக்கவழக்கங்கள், நில உரிமை உட்பட பல்வேறு சட்டங்களில், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.மேலும், வெளி மாநிலத்தவர்கள், மிசோரமிற்குள் நுழைய, ஐ.எல்.பி., எனப்படும், அனுமதிச் சீட்டை பெறுவது; வெளி மாநிலத்தவர்கள், மிசோரமில் நிலம் வாங்க முடியாதது போன்ற பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன.


இந்நிலையில், மிசோரமை சேர்ந்தவர்கள் வெளி மாநிலத்தவர்களை திருமணம் செய்து கொள்வது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.இதையடுத்து, மிசோ சிர்லாய் பாவல் எனப்படும் மாணவர் அமைப்பின் மூலம், பள்ளி மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.இதில், நுாற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். &'மிசோரம் மக்களின் அடையாளத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்போம். வெளி மாநிலத்தவர்களை திருமணம் செய்து கொள்ள மாட்டோம்&' என, மாணவ - மாணவியர், உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment