அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் 


முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் மேலும் பேசிய அமைச்சர், மத்திய அரசு நிதியுதவியுடன் அரசு பள்ளிகளுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். கூட்டு முயற்சியோடு ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டால் பின்லாந்தைவிட தமிழகம் கல்வியில் முன்னோடியாக திகழும்' என்றார். இந்த விழாவில், 377 பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விருதுடன் ரூ.10,000 மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Please Comment