கும்பகோணம்: மாணவ, மாணவிகளின் கண்கவர் ஓவியக்கண்காட்சி - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Saturday, September 14, 2019

கும்பகோணம்: மாணவ, மாணவிகளின் கண்கவர் ஓவியக்கண்காட்சி

கும்பகோணம்: மாணவ, மாணவிகளின் கண்கவர் ஓவியக்கண்காட்சி
கும்பகோணம்,கொட்டையூர் அரசு கவின் கலை கல்லூரியில் நடைபெற்று வரும் ஓவிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மாண, மாணவிகளின் படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கானஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியினை முன்னாள் கல்லூரிமுதல்வர் வித்யாசங்கர் ஸ்தபதி தொடங்கி வைத்து சிறந்த கண்காட்சி படைப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை ஊக்கத்தொகையும், சான்றிதழும்வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
இதில் மாணவ, மாணவிகள் தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய ஆயில் கலர், அக்ரலிக் கலர், நீர் வண்ணம், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், காட்சி வழி தகவல்கள், பதிப்போவிய கலை, விழிப்புணர்வு போஸ்டர்கள், போட்டோக்கள் என150க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றன. இதில் 44 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டன. 
இந்த ஓவியக் கண்காட்சி வரும் 18ம் தேதி வரை காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளதாககல்லூரி முதல்வர் (பொ) அருளரசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment