ஆசிரியர்களுக்கு விரைவில் லேப்டாப்! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

ஆசிரியர்களுக்கு விரைவில் லேப்டாப்!

ஆசிரியர்களுக்கு விரைவில் லேப்டாப்! 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கிவைப்பார் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. 377 ஆசிரியர்களுக்கு இதில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்," ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கிவைப்பார். மத்திய அரசின் நிதி உதவியுடன் 90 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்னைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது" என்றார்.

No comments:

Post a Comment

Please Comment