ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான  ஒருநாள் கருத்தரங்கம் - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Saturday, September 21, 2019

ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான  ஒருநாள் கருத்தரங்கம்

ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான  ஒருநாள் கருத்தரங்கம்

காரைக்குடி,செப்.21:காரைக்குடியில் இராஜ ராஜன் கல்விக்குழுமம், ஆக்டிவ் தமிழ் இணைய தளம் மற்றும் கல்வியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீஇராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் 
சிகரம் சி.சதிஷ்குமார் வரவேற்றுப் பேசினார்.

தேசிய நல்லாசிரிய விருதாளர் 
கவிஞர் தங்கம்மூர்த்தி தொடக்கவுரையாற்றினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கோகிலா தங்கசாமி குழந்தைகள் மனம் மகிழும் வகையில் தமிழ் கற்பித்தல் குறித்தும்  ,சென்னை தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர் முனைவர் சிந்தை ஜெயராமன் பாடங்களை ஒருங்கிணைத்துக் கற்பித்தல் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

முன்னதாக தமிழ் கற்பித்தல் முறைகள் பற்றி பேராசிரியர் கோகிலா தங்கசாமி எழுதிய தமிழா தமிழ் படி என்ற மூன்று புத்தகங்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மாவட்ட முதன்மை மேலாளர் சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட  ஆசிரியர்களுக்கு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் உற்சாகமாக வாசிப்பதற்குரிய ஆர்வத்தையும் திறனையும் வளர்த்தல் எப்படி என்றும் தமிழ் கற்பிப்பதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எப்படி என்றும் வெவ்வேறு பாடங்களை இணைத்துக் கற்பிக்கும் உத்திகள் பற்றியும் ,ஒரு பாடத்தை கற்பிக்கும் பொழுது இன்னொரு பாடத்தோடு தொடர்புபடுத்திக் கற்பிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சிவக்குமார்,பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்  (  பொறுப்பு) பி.பொன்வாசன்,

சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஷீலா சுந்தர் ஆகியோர்  செய்திருந்தனர்.

நிகழ்வுகளை  முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ் தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரி முதல்வர்கள்,பேராசிரியர்கள்,முதுகலை, பட்டதாரி,இடைநிலை ஆசிரியர்கள்,

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ,
தமிழாசிரியர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

முடிவில் ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியை செ.பெரியநாயகி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

இந்த வலைப்பதிவில் தேடு:

LIKE OUR FACEBOOK PAGE

நட்பில் இணைந்திருங்கள்